'தீவிரவாதம் உலகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. எனினும், தீவிரவாதத்தை இஸ்லாம் மதத்துடன் ஒப்பிட்டு பார்ப்பது தவறான ஒன்று. நியாயமற்றது.
இஸ்லாமியர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் அல்ல. அவர்களுக்கு ஆதரவானவர்களும் அல்ல' என திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமா கருத்து தெரிவித்துள்ளார்.
அமைதியை நிலவச்செய்ய புத்தர் போதித்த சகோதரத்துவத்தை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே உலக அமைதியை நிலைநிறுத்த முடியும் என்று மகாத்மா காந்தி கூறியதையும் சுட்டிக்காட்டினார்.
