நுவரெலியா உலக முடிவு பகுதியில் விழுந்தவர் உயிர் தப்பினார்(இணைப்பு2)

ம்பேவலை ஓட்டன் சமவெளி உலக முடிவு பகுதியில் இருந்து தவறி விழுந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மனிதா என்ற 35 வயதுடைய நபர் மூன்று மணி நேரம் மரத்தில் தொங்கி போராடிய நிலையில் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்று சனிக்கிழமை நுவரெலியாவின் அம்பேவலை உலக முடிவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனிதா என்ற 35 வயது வாலிபரும் அதே நாட்டை சேர்ந்த லின்டா என்ற 31 வயது பெண்மணியும் கடந்த 10.02.2015 அன்று நெதர்லாந்து நாட்டில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

திருமணத்தின் பின்பு இவர்கள் இருவரும் கடந்த 14.02.2015 ஆம் திகதி இலங்கைக்கு தமது சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.

இதன் பின்பு (20.02.2015) அன்று மாலை நுவரெலியா வருகை தந்த இவர்கள் 21.02.2015 அன்று காலை 4.30 மணியளவில் நுவரெலியாவில் இருந்து புறப்பட்டு உலக முடிவு பகுதியை பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர்.

அங்கு சென்றதும் இவர்கள் இருவரும் தன்னை அழைத்து வந்த இவர்களின் வழிகாட்டியை விட்டு விட்டு உலக முடிவு பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்ற இவர்கள் 21.02.2015 அன்று காலை 8.50 மணியளவில் புகைப்படம் எடுக்க முயற்சித்த வேளையில் கால் தவறி மனிதா என்ற வாலிபர் பாதாளத்தில் பின்பறமாக விழுந்துள்ளார்.

இதன்போது அதிஸ்டவசமாக ஒரு மரத்தில் விழுந்த இவர் அதனை கட்டியனைத்தபடி போராடியுள்ளார்.

பின்பு பொலிசாருக்கும் படை வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

இதன்போது நுவரெலியா மூன்றாவது சிங்க படை பிரிவை சேர்ந்த கோப்ரல் சுதேஸ் லலிந்த என்பவர் இவரின் உயிரை காப்பாற்றியுள்ளார். இதற்கு பொலிசாரும் வான்படையினரும் உதவி புரிந்துள்ளனர்.

பின்பு இவர் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சையின் பின்பு இவர்களுடைய பயணத்தை தொடர்ந்தனர்.

குறித்த நபர் சுமார் மூன்று மணித்தியாலயம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -