பி.எம்.எம்.எ.காதர்-
கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட மருதமுனை,பாண்டிருப்பு,பெரிய நீலாவணை பிரதேசங்களில் வீதிகளில் உள்ள பல தெரு விளக்குகள் எரியவில்லை. பல மின் குமிழ்கள் பழுதடைந்த நிலையிலும்,சில இடங்களில் மின் குமிழ் இல்லாமலும் காணப்படுகின்றது.
இதன் காரணமாக இரவு நேரத்தில் பொது மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர். இருள் சூழ்ந்த பிரதேசங்களில் கள்வர்களின் தொல்லையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
ஏனவே கல்முனை மாநகர சபை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.