கிழக்கு மாகாண சபை உறுப்பினா்ஆாிப் சம்சுடீனின் பண்முகப்படுத்தப்பட்ட
வரவு வெலுவுத்திட்ட நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பாடசாலை
உபகரணங்கள் வழங்கும் வைபவம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணிக்கு நிந்தவூா் அல்-மஸ்ஹா் மகளீா் உயா்தர பாடசாலையில் வைத்து
வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் சகல தரங்களையும் சோ்ந்த சுமாா் 150 மாணவா்கள் பாடசாலை
உபகரணங்களை பெற்றுக் கொள்ளவிருக்கின்றனா். இத்துடன் நிந்தவுா் பிரதேசத்திலிருந்து பல்கலைக் கழகங்களுக்குத் தொிவு செய்யப்பட்ட மாணவா்களும் இந் நிகழ்வின் போது கௌரவிக்கப்படவுள்ளனா்.
இவ் வைபவங்களில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளா் நாயகமும்,சுகாதார ராஜங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸனலி கலந்து கொண்டு பாடசாலை மாணவா்களுக்குரிய உபகரணங்களை வழங்கி வைப்பதுடன் .பல்கலைக்கழகங்களுக்கு தொிவு செய்யப்பட்ட மாணவா்களின் கௌரவிப்பு நிகழ்விலும் கலந்து கொள்வா்.
இவ் நிகழ்வின் போது பிரதேச அரசியல் பிரமுகா்கள்,சமூகப் பொியாா்களும்
கல்விசாா் சமூகத்தை சோ்ந்தவா்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனா்
