காரைதீவு பிரதேச செயலக கலாசாரபேரவை பொதுக்கூட்டமானது பிரதேச செயலாளர் திருமதி.S.சிறிகாந் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேசத்தில் உள்ள கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் கலந்துகொண்டதோடு பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமசேவக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் கலாசாரபேரவை பொதுக்கூட்டத்தில் காரைதீவு பிரதேச செயலக பிரிவில் பல்வேறுபட்ட கலை கலாசார பண்பாடுகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களுக்கான முன்மொழிவுகள் முன்வைக்பட்டடு அதற்காக ஆலோனைகளும் கலந்துரையாடப்பட்டதுடன் கலாசாரபேரவையின் நிர்வாக கட்டமைப்பும் சீரமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.