இலங்கை 67வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. 'செழிப்புமிக்க தாய்நாடு அபிமானமிக்க நாளைய தினம்' என்பதே இவ்வருட சுதந்திர தின தொனிப்பொருளாகும். உலக வரலாற்றினை எடுத்துக் கொண்டால், சகல பிரச்சினைகளுக்கும் மையமாகக் கொண்டிருப்பது அதிகாரமும், ஆட்சியும்தான்.
இலங்கை பிரித்தானிய பேரரசிற்குக் கீழ்ப்பட்ட குடியேற்றம் ஒன்றாகவிருந்தது. எமது நாடு மட்டுமல்ல ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்த நாடுகளும் குடியேற்றவாதத்திற்குட்பட்டவையாக இருந்தது.
ஒரு நாடு தன்னுடைய நாட்டு;க்கு மேலதிகமாக இன்னும் பல நாடுகளைத் தனது அதிகாரத்திற்குட்படுத்தி அவற்றை ஆட்சி புரியுமாயின் அது ஏகாதிபத்தியம் எனப்படும். இவ்வாறான ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைப்பட்ட நாடுகள் குடியேற்றங்கள் எனக் குறிப்பிடப்படும்.
எமது நாட்டு மக்கள் பிரித்தானிய ஆட்சியில்; வாழப் பழகிக் கொண்டனர். இருந்த போதிலும் அந்நியர்கள் எமது நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காது அவர்களுக்கு அடிமைத் தனத்தினைக் கற்றுக் கொடுத்தனர். இதனை அப்போதைய எமது நாட்டுத் தலைவர்கள் விரும்பவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மக்களின் இறைமை மற்றும் சுதந்திரம் பற்றி குரலெழுப்பினர்.
இதன்வெளிப்பாடாக இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதென 1947ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்றைய பிரதமர் டி.எஸ்.சேனாநாயக அவர்களுடன் மூன்று ஒப்பந்தங்களை பிரித்தானியா அரசு கைச்சாத்திட்டது.
1. பாதுகாப்பு ஒப்பந்தம்:
கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை கடற்படை முகாமிலும், கட்டுநாயக்கா விமான நிலையத்திலும் பிரித்தானிய படைகளை வைத்திருப்பதற்கு இலங்கை இணங்குதல்.
2. வெளிவிவகார ஒப்பந்தம்:
பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரமடைந்த நாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் போது பிரித்தானியா விதித்திருக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு சம்மதித்தல்
3. அரச ஊழியர் தொடர்பான ஒப்பந்தம்:
இலங்கையில் பணியாற்றும் ஆங்கிலேய அரச ஊழியர்கள் தொடர்ந்தும் பணியாற்றும்போது அவர்களின் ஓய்வூதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதி என்பவற்றை தங்கு தடையின்றி வழங்குவதற்கு இலங்கை சம்மதித்தல்.
இந்த மூன்று விடயங்களையும் நடைமுறைப்படுத்துவதென இணக்கப்பாடு காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானத்தின்படி 1947ல் சோல்பரியாப்பை அடிப்படையாகக் கொண்டு சுதந்திரத்தை வழங்குவதற்காக இலங்கை சுதந்திர சட்டம் அமுலுக்கு வந்தது.
இலங்கை சுதந்திரச் சட்டம் 1947ம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சட்டமாகும்.
இதன் பிரதான வாசகம் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி முதல் இலங்கை பிரித்தானியாவின் குடியேற்ற நாடு அல்ல என்பதுடன் இலங்கை தொடர்பாகப் பிரித்தானிய பாராளுமன்றம் பெற்றிருந்த ஆணையிடும் சட்டங்களாகப் பிறப்பிக்கும் அதிகாரம் இழக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இலங்கை பாராளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் விரிவடைந்து காணப்பட்டது.
சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் அரசியல், பொருளாதார மாற்றங்களாக அரசியல் கட்சி முறை, அமைச்சரவை போன்ற மாற்றங்களின் மூலம் பாராளுமன்ற ஜனநாயகம் செயற்படு;த்தப்பட்டது.
பிரித்தானிய காலநித்துவாதிகளுக்கு எதிரான போராட்டத்திலும், சுதந்திரப் பிரகடனத்திலும், இலங்கை அரசினை ஸ்தாபித்ததிலும் இனத்துவ அடையாளங்களே இலங்கை தேசிய வாதத்தை மேவி நி;ன்றன. தீர்மானம் எடு;க்கின்ற எல்லாக் கட்டங்களிலும் இனரீதியான கருத்துக்கள் மற்றும் உள்நோக்கு அம்சங்கள் சிங்களத் தலைவர்களிடம் துளிர்விட்டிருந்தது. இந்தியாவைப் போன்று அல்லாது இலங்கை மிகவும் இலகுவாகத் தனது சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது.
இதற்கு முன்பாகவே பிரித்தானிய சீர்திருத்தம் தொடர்பாக இலங்கைப் பிரதிநிதிகளோடு கலந்துரையாடியுள்ளனர். டொனமூர் ஆணைக்குழு புதிய யாப்பினை வரைந்த போது இலங்கையின் பன்மைத்துவம் வெளி;ப்பட்டது. சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முழு இலங்கை தேசத்தின் தலைவர்களும் ஒன்று பட்டிருந்ததால் எவரையும் குறைத்து மதிப்பிட முடியாதென்ற கருத்தை வரைதற் குழுவினர் கொண்டிருந்தனர்.
ஓவ்வொரு இனக்குழுவும் ஆணைக்குழுவில் தனது பிரதிநிதித்துவத்தைக் கோரி நின்றது. டொனமூர் ஆணைக்குழுவும். சுதந்திரத்திற்கான யாப்பை வரைந்த சோல்பரி ஆணைக்குழுவும் இச் சிறுபான்மையினருக்கான விசேட ஏற்பாடுகளை செய்திருந்தன. இத்தகைய பாதுகாப்புக்கள் இருந்தும் சிங்களவரின் மேலான்மையை அவை எவ்விதத்திலும் தடுக்கவில்லை. தேசியக் கொடி, தேசிய கீதம், விடுமுறை நாட்கள், விழாக்கள் கொண்டாட்டங்கள் ஆகிய தேசிய அடையாளங்கள் இவை இனத்துவ பிளவுகளுக்கு அப்பால் இருக்க வேண்டியவையாக இருந்தும் யாவும் சிங்களவர்களி;ன் கலாசாரத்தையே பிரதிபலி;த்தன. இதன் விளைவாக ஒருங்கிணைக்கப்பட்ட அரசியற் கலாசாரத்திற்குப் பதிலாக சிதறிப் போன அரசியற் கலாச்சாரமே மேலோங்கி நின்றது.
அடிப்படைச் சுதந்திரம்
சுதந்நதிரத்தின் பிற்பாடு மனித உரிமைகள் பற்றிய கருத்துக்;கள் வளர்ந்து புதிய அர்த்தங்களைப் பெற்றிருந்தது. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமையின் அத்தியாயம் மூன்றில் பதினான்காவது உறுப்புரையே அடிப்படைச் சுதந்திரங்கள் பற்றி கூறுகிறது.
பேச்சுச் சுதந்திரமும், கருத்துவெளிப்படுத்தும் சுதந்திரமும் இதில் முக்கியமானதாகும். இலங்கை நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் இதனை அனுபவிப்பதற்கு உரித்துடையவர்கள். நாட்டின் அரசியல் நிலவரங்கள் மற்றும் சமூகச் சீர்கேடுகள் பற்றி எந்தக் கருத்தினையும் வெளியிட முடியும். இதனை கருத்தியல் ரீதியான விமர்சனமாக் கொண்டு நல்ல விடயங்களை எடுத்து நடப்பதன் மூலம் அடிப்படை உரிமையொன்றினை அனுபவிக்க முடியும்.
அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கு அல்லது ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரமானது எமது நாட்டு மக்கள் ஏதோ ஒரு வகையில் ஒன்று சேர்ந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும், குழு நிலையில் தீர்மானம் எடுப்பதற்கும் உரிமையளிக்கின்றது. இந்த உரிமையினை நாட்டு மக்கள் அனுபவிப்பதற்கு ஆட்சியில் உள்ள அரசுகள் பாதுகாப்புக் கொடு;ப்பது உரிமையின்பாலுள்ள கடமையாக இருக்கின்றது.
தொழிற் சங்கம் ஒன்றை அமைப்பதற்கும் அதில் சேரவும் உள்ள சுதந்திரத்தின் மூலம் ஒரு தனி நபருக்கு ஏற்படுகின்ற அநீதிகளை குழு நிலையில் தட்டிக் கேட்க முடியும். மட்டுமன்றி ஒரு பாரிய செலவுகளை அல்லது இடர்களை சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் எதிர்கொள்ளுமிடத்து அவருக்கான உதவிகளை கூட்டாகச் சேர்ந்து செய்வதற்கு பெரிதும் உதவுகின்றது. தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் மக்கள் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கும் முடியும்.
ஒருவர் தனியாகவோ அல்லது மற்றவர்களுடன் சேர்ந்தோ பகிரங்கமாகவேனும், அந்தரங்கமாகவேனும் தமது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும், அனுசரிப்பிலும் சாதனையிலும், போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரம் உண்டு.
இந்த உரிமையினை அனுபவிக்கும் போது இதனை மட்டுப்படுத்தவோ அல்லது அரசியற் பிரமுகர்கள் சொந்த அபிப்பிராயத்தின் பேரில் சமய நம்பிக்கைகளை தடுக்கவோ அல்லது கொச்சைப்படு;த்தவோ முடியாது. இது ஒரு ஜனநாயகநாட்டில் பிரஜைகளுக்குள்ள அடிப்படை உரிமையாகும்.
ஏதேனும் சட்ட முறையான முயற்சியில், உயர்தொழிழில், வியாபாரத்தில், தொழிலில் அல்லது தொழில் முயற்சியில் தானாக அல்லது ஏனைவர்களுடன் சேர்ந்து ஈடுபடுவதற்கான சுதந்திரம். இச்சுதந்திரமானது நாட்டின் அபிவிருத்திக்கு பெரிதும் பங்களி;ப்புச் செய்வதால், இதனை ஊக்கப்படுத்துவது அரசின் கடமையாக இருக்கின்றது. இதில் இனரீதியான பாகுபாடு காட்டி வியாபார தளங்களை அகற்றும் நடவடிக்கையோ அல்லது தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயலோ அடிப்படை உரிமை மீறலாகும்.
இலங்கை முழுவதும் தடையின்றி நடமாடுவதற்கும், தான் விரும்பும் இடத்தில் வசிப்பதற்கும் ஆன சுதந்திரம் அத்துடன் இலங்கைக்கு திரும்பி வருவதற்கான சுதந்திரம். ஒவ்வொரு பிரஜையும் இந்நாட்டின் சொந்தக்காரர்கள். அவர்கள் விரும்பும் இடங்களில் இருப்பிடங்களை அமைத்துக் கொள்ள முடியும். இதில் எந்த பாரபட்சமும், இனரீதியான ஓரங்காட்டலும் காட்ட முடியாது.
வேறு ஏதேனும் நாட்டின் பிரஜையொருவராக இல்லாதிருப்பவரும், இவ் அரசியல் அமைப்பு தொடங்குவதற்கு நேர்முன்னர் இலங்கையில் நிரந்தரமாகவும் சட்டப்படியும் வதிவிலிருந்தவரும் தொடர்ந்து அவ்வாறு வதிவிலிருப்பவரும் ஆன ஆளொருவர், அரசியல் அமைப்பு தொடங்கியதிலிருந்து பத்து ஆண்டுகளைக் கொண்ட ஒரு காலப் பகுதிக்கு இவ்வுறுப்புரையின் முதலாம் பந்தியில் வெளிப்படுத்தி ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமைகளுக்கு உரித்துடையவராதல் வேண்டும்.
எனவே கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தினை நாட்டு மக்கள் எந்த வேறுபாடுகளுமின்றி அனுபவிப்பதன் மூலமும், அடிப்படை சுதந்திரங்களை பாதுகாப்பதன் மூலமும் நாட்டில் வளமான, சுபீட்சத்தைக் காண முடியும். சுதந்திரத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி தேசப்பற்றை வளர்ப்போம்.
.jpg)