முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சியில் தொடர்ந்து விமல் வீரவன்ச இருப்பது பிரதமராகும் முயற்சியிலேயே என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நாட்களில் நுகேகொடையில் இடம் பெற்ற பேரணியில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை அழைத்து நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டுக் கொடுக்காமல் பேசியதற்கான காரணம் பிரதமர் பதவியை தான் கைப்பற்றும் முயற்சியிலேயே.
அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால் இவ்வளவு காலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தாங்கிய எங்களின் நிலை என்ன என்று யோசிக்க வேண்டும் என சுசில் பிரேம ஜயந்த மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்படியே தொடர்ந்து நடந்தால் எதிர்வரும் பொது தேர்தலில் தினேஷ், கம்மன்பில என வேட்பாளர் பட்டியல் பெரிதாகிக் கொண்டே செல்லும் என தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள், அவ்வாறான பிரச்சினை ஒன்று ஏற்படாமல் தடுப்பதற்கு மகிந்த ராஜபக்ச பிரதம வேட்பாளராக போட்டியிட வைக்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ச போட்டியிடவில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களுக்காக வாக்குகள் கேட்டு பிரதேசங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் சுசில் பிரேம ஜயந்த உட்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குழுவினர்கள் கட்சியின் தலைமைத்துவத்திற்கு யாரை நியமிப்பது என்று கலந்துரையாடல் மேற்கொண்டு உடனடியாக பதில் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள்.
