இக்பால் அலி-
அக்குரணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்விக்குச் சான்று பகர்ந்தோர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் கேட்போர் கூடத்தல் 02-02-2015 நடைபெற்றது.
பழைய மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம். ஜே. எம். பைசல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கட்டுகஸ்தோட்டை கல்வி வலயப் பணிப்பாளர் வை. எம். சீ. டி. யாப்பாரத்தனவும் கௌரவ அதியாக மத்திய மாகாண முஸ்லிம் கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் என். எம். நசார், கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ;nஷய்க் ஹியான் , முன்னாள் அக்குரணை பிரதேச செயலாளரும் தற்போது நிதி அமைச்சில் கடமையாற்றுபவருமான ஜாபீர், தென் கிழக்குப் பல்லைக்கழகப் அரபு மொழியியல் துறைப் பரிவின் பீடாதிபதி எஸ். எம். மஷhஹீர்;, உஸ்தாத் மன்சூர், அஸ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் இக்பால் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் சேவையாற்றிய முன்னாள் அதிபர் ஏ, ஆர், எம். உவைஸ், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஏ. எஸ். எம். சபீக், இப்பாடவாலையில் கடந்த 15, 20 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஆசிரியர்கள், பழைய மாணவர் ஒன்றியத்திற்காக நீண்ட நாள் சேவையாற்றி ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்ட ஊரின் முக்கிய பல இங்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)