வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு குழு நியமனம்!

வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் தகவல்களையும் சாட்சியங்களையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த குழுவை நியமித்துள்ளார். இந்த குழுவுக்கு ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி விமல் நம்புவசம தலைமை தாங்குவதுடன் ஏனைய உறுப்பினர்களாக முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசோக விஜயதிலக்க மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சிமன்ற அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சட்டத்தரணி எஸ்.கே. லியனகே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள எழுதது மூலமாகவோ அல்லது 0112697908 மற்றும் 0112699812 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவோ அறிவிக்கலாம். தகவல் வழங்குவர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும். 

கொழும்பு 8, கலாநிதி என். எம். பெரெரா மாவத்தை, 35 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள கட்டிடத்தின் நான்காவது மாடியில் இந்த குழுவின் செயலகம் இயங்கிவருகின்றது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -