இக்பால் அலி-
சிறுபான்மை சமூகத்தில் கல்வித்துறையில் சில குறைபாடுகள் காணக் கூடியதாக இருக்கின்றது . இந்தக் குறைபாடுகள் எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் தன்னுடைய வேலைத் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் வீ இராதாகிருஷ;ணன் 07-02-2015 இன்று கண்டியியிலுள்ள சமய வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காக கண்டி ஸ்ரீ செல்வவிநாயகர் கோவில் , கண்டி மீரா மக்காம் பள்ளிவாசல் மற்றும் தலாதா மாளிகைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
அமைச்சர் கண்டி மீராமக்காம் பள்ளிவாசலுக்கு வருகை தந்தவர் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
எந்தவிதமான இன வேறுபாடுகளுமின்றி முழு நாட்டுக்கும் கல்விச் சேவையாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பொதுவாக இனங்களுக்கிடையே ஒரு ஐக்கியத்தை உண்டாக்க வேண்டும்.
இந்த நாட்டிலுள்ள ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் ஒரு சமூகமான ஒரு நல்லாட்சியை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஆட்சியிலே இனங்களுடைக்கிடையே விரோதம் மதங்களுடைக்கிடையே குரோதம் சாதி சனம் என்ற பிரச்சினைகள் இல்லாமல் நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து செயற்பட சந்தர்ப்பம் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்திலே நாங்கள் அனைவரும் சேர்ந்து செயற்படக் கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கி எதிhகாலத்திலே மக்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த நாட்டிலே கல்வி சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும்.
இந்த சூழ்நிலையில் இதற்கு என்னாலான முழு பங்களிப்பையும் செய்யவுள்ளேன்.அந்தவகையில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் கல்வி தொடர்பாக ஆராய்வதற்கு அறிஞர்கள் குழாமையும் அதேபோல முஸ்லிம் அறிஞர்கள் குழாமையும் ஒரு ஆலோசனை நியமிப்பதற்காக அழைத்துள்ளேன். இதே போன்று வட மாகாணம். கிழக்கு மாகாணம் மற்றுமம் ஏனைய மாகாணங்களிலும் இந்த வேலைத் திட்டம் விரைவாக மேற்கொள்ளப்படும்.
இதில் பாடசாலை மட்டத்தில் காணப்படும் குறைபாடுகளும் கல்வியில் உள்ள குறைபாடுகள் என ஆராய்ந்து எதிர்காலத்தில் அதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதற்கு ஒரு அடிப்படையான தீர்மானத்தை எடுத்து எந்த வகையில் உதவி செய்ய முடியுமோ அந்த வகையில் வேலை செய்யலாம் எனக் கருதுகின்றேன்.
நான் கடந்த காலத்தில் மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த போது தமிழ் பாடசாலைகளுக்கு மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு உதவி செய்யக் கிடைத்தது. தற்போது மத்திய அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருக்கின்றபடியால் முழு நாட்டுக்கும் சேவை செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை எந்தவிதமான இனபேதமுமின்றி செயலாற்றவுள்ளேன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான லாபீர் ஹாஜியார், வி. குமார், ராஜாராம் ,கண்டி மாநகர சபை உறுப்பினர் இலாஹி ஆப்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)