மஹிந்த தம்மை 19 நிமிடங்கள் துர்வார்த்தைகளினால் திட்டினார்- சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்மை 19 நிமிடங்கள் துர்வார்த்தைகளினால் திட்டியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தாம், அவரை வாழ்த்துவதற்காக தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுத்தாகவும் அதன் போது கடுமையான துர்வார்த்தைகளினால் 19 நிமிடங்கள் தம்மை திட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஏற்கனவே சில ஊடங்களில் தகவல் வெளியிட்ட போதிலும் அவை வெளிப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தம்மை தொடர்ச்சியாக திட்டிக் கொண்டே சென்றதாகவும் இறுதியில் தமக்கு தெரிந்த இரகசியம் ஒன்று பற்றி கூறிய போது அப்படியே தொலைபேசி அழைப்பினை துண்டித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக மஹிந்த தம்மை பழிவாங்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமாக வழங்கப்பட வேண்டிய வீட்டை வழங்க விடாது தடுக்க முயற்சித்தார் எனவும், பாதுகாப்பை வாபஸ் பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துண்டிக்கப்பட்டமை குறித்து அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு தாம் முறைப்பாடு செய்ததனைத் தொடர்ந்து வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பில் நான்கில் ஒரு பகுதி மீள வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசியல் சாசனத்தின் காரணமாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் தமக்குக் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராக பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நிறைவேற்ற தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஸ சூழ்ச்சித் திட்டம் தீட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

முதலில் 23 பாராளுமன்ற உறுப்பினர்களை திரட்டி வருவதாகத் தெரிவித்த மஹிந்த இறுதியில் ஆறு பேரை மட்டுமே அழைத்து வந்ததாகவும், அதனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் 75 வீதத்தை தாமே முடித்ததாகவும், இரண்டு அதிவேகப்பாதைகள் மற்றும் தாமரைத் தடாகம் ஆகியனவற்றை தாமே உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -