பெப்ரவரி முதலாம் வாரத்திலிருந்து கொழும்புக்கு 'எயார் சைனா' விமானசேவை!

ஐ.ஏ. காதிர் கான்-

சீனாவின் பிரதான விமானசேவையான 'எயார் சைனா' கொழும்பிற்கும் சென்ட் ஜோவிற்கும் இடையிலான நேரடி விமானசேவைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமானசேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்நேரடி விமானசேவைகள் வாரத்தில் நான்கு நாட்கள் இடம்பெறவுள்ளதுடன் சென்ட் ஜோவில் இருந்து முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையின் முதன்மையான விருந்தோம்பல் சேவை வழங்குநரான ஜெட்வின்ங விமானசேவை சீனாவின் 'எயார் சைனா' உடன் இணைந்து இச்சேவையை முன்னெடுக்கவுள்ளது. 

இரு நாடுகளுக்குமிடையே முன்னெடுக்கப்படும் விமானசேவைகள் இராஜாங்க அமைச்சர் சட்டதரணி பைஸர் முஸ்தபா இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது 'சிறந்த பண்பாடு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி போன்ற விடயங்களில், இது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் ஒரு அம்சமாகும். 

கடந்த வருடம் இலங்கைக்கு 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதில் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் கனிசமான அளவு அதிகரித்துள்ளது. 

சீன சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்கான வருகையை இந்த புதிய விமானசேவையின் மூலம் இவ்வருடம் முதல் எதிர்வரும் காலங்களில் கிரமம் கிரமாக மேலும் அதிகரிப்போம். நமது நாட்டின் சுற்றலாத்துறையை எதிர்காலத்தில் முன்னேற்றகரமான மற்றும் அந்நிய செலாவணியைப் பெற்றுத் தரும் வகையில் மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -