இது பற்றி அவர் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது சம்பந்தமாக உலமா கட்சி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் பேச வேண்டும் என்ற தங்கள் கட்சியின் கோரிக்கையை கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த உடனடியாக ஏற்றுக்கொண்டு நாளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்துள்ளதாக முபாறக் மௌலவி தெரிவித்தார்.
அத்துடன் 2005 ம் ஆண்டு முதல்; உலமா கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்தது. தம்புள்ள பள்ளிவாயல் அசம்பாவிதத்தை தொடர்ந்து உலமா கட்சி அரசுக்கான ஆதரவை விலக்கியதோடு கடந்த கிழக்கு மற்றும் மேல்மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கியது. தம்புள்ள பள்ளி விடயத்தில் அரசுக்கான தரவை விலக்கிக்கொண்ட ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சி மட்டுமேயாகும்.
இந்நிலையில் அண்மையில் ஐ தே வுக்கான ஆதரவை உலமா கட்சி விலக்கிக்கொண்டதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு மீண்டும் தனது ஆதரவை வழங்கி வருகிறது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக வேட்பாளர்களை கண்டு பேசி முடிவெடுப்பது என்ற கட்சியின் தீர்மானத்துக்கமைய நாளை அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் உலமா கட்சியினருக்குமிடையில் பேச்சு வார்த்தை இடம் பெறவுள்ளது.

0 comments :
Post a Comment