ஆளும் கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஆறு பேர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகிக்கொண்டனர்.
இந்த உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மைத்திரிபால சிறிசேன ,ராஜித சேனாரட்ன ,துமிந்த திஸாநாயக்க, நவீன் திஸாநாயக்க, வசந்த சேனாநாயக்க மற்றும் பேசல ஜயரட்ன ஆகியோருக்கு எதிராக இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கட்சியின் மத்திய செயற்குழு நேற்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி இதனை தெரிவித்துள்ளார்.-

0 comments :
Post a Comment