பைஷல் இஸ்மாயில்-
கிழக்கு மாகாண சபை நடவடிக்கைகளை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததன் காரணமாக அதனைக்கண்டித்து எதிர்கட்சியினர் இன்று கிழக்கு மாகாண சபைக்கு முன்னாள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தை கிழக்கு மாகாண சபை முதலைமைச்சர் முன்வைத்து உரையாற்றியதை அடுத்து இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட ஆதரவுக்கான வாக்கெடுப்பு நடவடிக்கையில் சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து சபை நடவடிக்கை உடனடியாக 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைப்பு அறிவித்ததனை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறி வாக்கெடுப்பு சம்மந்தமாக ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் சபைக்குள் இருந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் செங்கோலை எடுத்துச்செல்ல முற்பட்ட வேளையில் ஆளும்தரப்பு உறுப்பினர்கள் அதனைத் தடுத்து நிறுத்த முயற்சித்தபோது கைகலப்பு ஏற்பட்டது.
இதனால் சபையின் தவிசாளர் ஆரியபதி கலபெத்தி சபையின் நடவடிக்கைகளை இன்று காலை 9 மணிக்கு ஒத்திவைத்தார்.
அதனைத்தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு சபை நடவடிக்கை ஆரம்பமானதும் சபையின் தவிசாளரினால் எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை சபையை ஒத்திவைத்தார்.
இதனைக்கண்டித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சபைக்கு முன்னால் சென்று சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒத்தி வைக்காதே! ஒத்திவைக்காதே!!
சபையை ஒத்தி வைக்காதே!!
இது மாகாண சபையா இல்ல கொச்சிக்காய் கடையா!!
இப்படியான கோஷத்துடன் அர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.





0 comments :
Post a Comment