சுலைமான் றாபி-
புலமைப்பரிசில் பரீட்சையில் நிந்தவூர் அல்-அதான் வித்தியாலயம் சார்பாக அதிக புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவி எஸ்.பாத்திமா நுசைபாவினைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (01.12.2014) பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி ஏ.எம். சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம். சலீம் ஜப்பானின் விஷேடகல்வி பயிலுனர் செல்வி. சகோரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவியை பாராட்டி கௌரவித்தனர். இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் திருமதி ரி.எம். சுபைர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை மாணவி எஸ்.பாத்திமா நுசைபா (159) புள்ளிகளைப் பெற்று இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment