ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி உட்பட கட்சியின் அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்துக்கு இன்னும் வராத நிலையில் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இதன் தொடராகவே நாளைய சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :
Post a Comment