நேற்று நடை பெற்ற எதிரணியின் புரிந்துணர்வு ஓப்பந்தமும் வாக்குறுதிகளும்….



ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-

கொழும்பு விகாரமாதேவி திறந்த வெளியரக்கில் நேற்று 01.12.2014 தின்கட் கிழமை காலை 9 மணிக்கு நடை பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் வைபவத்தில் எதிரணியும் கூட்ட்டுச் சேர்ந்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிதிகளும் முக்கியத்துவம் வாய்ந்த பல தலைவர்களும் கைச்சாத்திட்டனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னால் ஜனாதி பதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா,பாரளனன்ர உருப்பினர்களான ராஜித்த சேனாரத்ன,அர்ஜுன ரணதுங்க,எம்.கே.டி.எச். குனவர்த்தன சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் சோபித்த தேரர், போன்ற முக்கிய எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் ஒப்பந்தத்தில் கைசாத்திட்டனர்.ஆனால் பொது வேட்பாளர் மைத்திரி பாலவுக்கு ஆதரவான கருதுக்கலை வேலியிட்டு வரும் ஜாதிக ஹெல உறுமய கட்ட்சியும், மக்கள் விடுதல முன்னையும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டிராதமையானது மக்களின் கவனத்தில் எடுக்கப்பட்ட விடயமாக காணப்பட்டது.

ஒப்பந்தம் ஆரம்பமாகுவதற்கு முன்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காய் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்காக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நான்கு மதத்தலைவர்களின் மத வழிபாட்டுகளும் இடம்பெற்றது. இந்த ஒப்பந்தத்தில் முக்கிய விடயமாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பதவிக்கு வந்து 100 நாட்களில் அகற்றி மக்கள் சக்தியால் பொறுப்புக் கூறும் பாராளமன்ற முறைமையை நாட்டில் உறுவாக்குவது, 18வது திருத்தச் சட்டம் இல்லா தொழிக்கப்பட்டு சுயாதின ஆனைக்குழுக்கள் மீள் உறுவாக்கப்படல் என்ற முக்கிய விடயங்களை அடிப்படையாக கொண்டு மக்களின் நிகழ்ச்சி நிரல் என்ற கருப்பொருளில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தமானது அமையப்பெற்றிருந்தது.

இக்கு உரையாற்றிய எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேன… ஜனநாயக ஆட்ட்சியினை நிலை நாட்டுவதில் பல சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதனால் நாட்டில் ஜனாநாயக மிக சாதாரன ஆட்சியினை உறுவாக்குவதோடு புரிந்துணர்வு ஓப்பந்தத்தின் கோட்பாட்டுக்கு அமையவே எனது அனைத்து செயல்பாட்டினையும் மேற்கொள்வேன் என கூறியதுடன், எமது நாட்டு மக்களுக்காக கட்சி பேதத்தினை மறந்து ஒற்றுமையானதொரு செயற்பாட்டினை நிலைநாட்டுவதற்காக ஒன்றிணைந்துள்ளோம் எனக் கூறினார்.

மேலும் மக்களின் சாதாரன உரிமையை வென்றெடுப்பதோடு குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த நாட்டில் மிகச்சரியான அரசியலை செய்ய வேண்டும் என்பதற்காக நிறைவேற்று அதிகார முறையினை நீக்கி அதிகராப் பகிவின் ஊடாக மக்களின் அடிபடை உரிமைகளை வென்றெடுக்கு இந்த தூய பயணத்தில் அனைத்துக்கட்சிகளும் ஒன்றினைந்துள்ளதாக கூறினார். எனவே நாட்டில் நல்லதொரு சமூகத்தை கட்டியெழுப்பி மக்களுக்கு தேவையான நல்லாட்சியினை உருவாக்கிக் கொடுப்பதில் எனது செயற்பாடு முக்கிய பாத்திரமாக அமையும் என உறுதியளித்தார்.

இங்கு உரையாற்றிய முன்னால் ஜனாதிபதி சந்திரிக பண்டார நாயக்க குமாரதுங்க… மைத்திரிபால நேர்மையான மணிதர் என்றும் அவருடைய அரசியல் வாழ்க்கையானது ஊழலற்ற அரசியல் வாழ்க்கை என்பதை சுட்டிக்காட்டியதுன். ஊழலற்ற தலைவரின் கீழேதான் இந்த நாட்டினை கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இந்த காலகட்டத்தில் எங்களை அர்பனித்து புனித பயணைத்தை இன்று ஆரம்பித்துள்ளோம். அந்த வகையிலே இந்த புனித பயணத்தில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டின் மக்கள் எம்மோடு இணைந்துள்ளதானது மைத்திரிபாலவின் வெற்றியை இப்போதே எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது எனக்கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :