மாணவன் அறைந்ததால் ஆசிரியைக்கு காது சவ்வு கிழிந்து வைத்திய சாலையில் அனுமதி

துரவாயலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த லட்சுமி (36) என்பவர் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவர் பள்ளியில் கம்ப்யூட்டர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பிளஸ் 2 மாணவன் ஆகாஷ் கம்ப்யூட்டரை திடீரென ஆப் செய்து விட்டாராம். இதனால் அந்த மாணவனை ஆசிரியர் லட்சுமி கண்டித்துள்ளார். 

ஆத்திரம் அடைந்த மாணவன் ஆகாஷ் திடீரென ஆசிரியையின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இதனால் ஆசிரியை லட்சுமி நிலைதடுமாறி விழுந்துள்ளார், இதை பார்த்த சமமாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் பள்ளிக்கு வந்த ஆசிரியை தனக்கு காது வலிப்பதாக கூறி விடுமுறை எடுத்துக் கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு காது ஜவ்வு கிழிந்து இருப்பதாகவும், இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து ஆசிரியை லட்சுமி மதுரவாயல் காவல்துறையில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விகடன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :