இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எம்.எல். முஸ்மி அவர்கள் இவ்வருடம் கா.பொத.சாதாரண பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களின் நலன் கருதி பிரதான 5 பாடங்களுக்கான முழு அனுசரணையும் அவரால் வழங்கப்பட்டு இறக்காமம் சது.கமு. அஸ்ரப் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.எம். இஸ்மயில் அவர்களின் தலைமையில் பாடசாலை கேர்போர் கூடத்தில் கடந்த 2014.11.25ம் திகதியில் இருந்து ஆரம்பமாகிய இலவச கல்வி கருத்தரங்கின் இறுதிப் பாடமாகிய விஞ்ஞானப் பாடம் எ.எல். றிஸ்வான் ஆசிரியரால் நேற்று 2014.12.02 செவ்வாய்க் கிழமை முடிவடைந்தது.
இதில் பெரும் தொகையான மாணவர்கள் கலந்து நன்மை அடைந்ததுடன் இக் கல்வி கருத்தரங்குக்கு முழு அனுசரனையும் வழங்கிய பிரதேச சபை உறுப்பினர் எம்.எல். முஸ்மி அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment