ஒரு சமூகத்தின் எழுச்சி அதன் கல்வி முன்னேற்றத்திலே தங்கியிருக்கின்றது!

ரு சமூகத்தின் எழுச்சி அதன் கல்வி முன்னேற்றத்திலே தங்கியிருக்கின்றது அப்படியானால் சமூகத்தில் கற்றவர்கள் என்று பெருமை பாராட்டித்திரியும் நாங்கள் எத்தனை கற்றவர்களை உருவாக்க வழிவகை செய்திருக்கின்றோம். சமூகம் முன்னேர வேண்டும் அதில் கற்றவர்கள் அதிகம் இருக்க வேண்டும் என்று கூறுகின்ற நாம் சமூகம் தலை நிமர்ந்து நிற்க எவ்வழியையும் எதிர்கால சந்ததியினருக்கு காட்ட மறுக்கின்றோம்.

நான் மட்டும்தான் வைத்தியர் நான் மட்டும் தான் உளவள ஆலோசகர் நான் மட்டும் தான் கணக்காளர், நான் மட்டும் தான் பொறியியலாளர் நான் மட்டும் தான் சட்டம் கற்றவன் வேறு எவரும் இருக்கக் கூடாது என்று பேசித்திரிபவர்கள் எல்லாம் சமூகத்தில் அக்கறை கொண்டுள்ளோம் என்று சமூகத்தினை ஏமாற்றுகின்றார்கள்.ஏன் அரசியலுக்கு கூட பிரவேசிக்க ஆசைகொண்டுள்ளார்கள்.

இவர்களை சமூகம் நன்குனர்ந்து கொள்ள வேண்டும் இவர்கள் தான் இச்சமூதாயத்திற்கு ஆபத்தானவர்கள் இவர்கள் எக்கற்றவனையும் தனக்கு நிகராக உருவாக இடமளிக்கமாட்டார்கள். இப்படியானவர்களிடம் சமூக பொறுப்புக்களை அரசியல் பதவிகளை வழங்கக் கூடாது என்பதில் சமூகம் விழிப்பாக இருக்க வேண்டும்.ஏன் என்றால் இவர்கள் தனிக்காட்டு ராஜாவாக இருக்க அகம்பாவம் கொண்டவர்கள். பழிவாங்கும் சிந்தனை கொண்டவர்கள்.

அவர்களுடைய வாழ் நாளில் ஒருவனையாவது வைத்தியராக , சட்டத்தரணியாக உருவாக கைகொடுத்து உதவாதவர்கள் என்பதை இக்கல்முனையின் எதிர்கால சந்ததியினரும் உண்மையில் சமூகத்தினை நேசிப்பவர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அநாகரிகமாக செயற்படுவதற்கு ஒரு காரணம் அவர்களது குடும்ப பின்னனியும், பொறாமையும் என்பது வெள்ளிடைமலை. நல்ல மரம் தான் நல்ல கனியை கொடுக்கும் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் ஒருவனால் தான் சமூகத்திற்கு நல்லது நடக்கும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :