எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) வின் மறைவுக்கு சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அனுதாபம்!

ண்மையில் சிட்னி நகரில் காலமான இலங்கையின் முன்னோடி மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையின் மறைவுக்கு முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாகர், செயலாளரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தள்ளார். 1965 – 70 களில் மட்டக்களப்பு மொதடிஸ்ட் மத்திய கல்லூரியில் தான் படித்துக்கொண்டிருந்த போது எனது தமிழ் ஆசிரியாக தமிழ், இலக்கியத்துறையில்; குருவாக இருந்த அவரை நான் நன்றியுடன் ஞாபக மூட்டிப்பார்க்கிறேன்.

அக்காலங்களில் ஷஷஇளம்பிறை|| மாத இதழின் ஆசிரியராக இருந்த இந்தியாவைச் சேர்ந்த எம்.ஏ.ரகுமானை ஆசியராக கொண்ட அவ்விதழுக்கு சிரேஸ்ட ஆலோசகர் ஆசிரியராக இருந்து செயல்பட்டு வந்தார். எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் அக்காலங்களில் தினபதியில் தினமும் ஒரு சிறுகதை திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகர்த்தாகவும் அச்சிறுகதைகளை தொகுத்து அவர் அம்மாத இறுதியில் எழுதிவந்த சிறுகதைகளுக்கான விமர்சனக் கட்டுரைகளையும் நாம் இலகுவில் மறந்து விட முடியாது. அதன் மூலம் என்னைப் போன்ற பல புதிய சிறுகதை ஆசிரியர்களைத் உருவாக்குவதில் அவரின் பணி அளப்பரியது என்பது இத்தருனத்தில் குறிப்பிட்டுக் கூறலாம். 

அவர் எழுதிய பல நாவல்களில், முக்கிய நாவல்களாக் ஷஷவீ||, ஷஷதீ|| என்ற பெரும் நாவல்கள் புகழ்பெற்று விளங்கின. அக்காலத்தில் பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கும் சிக்கி விமர்சிக்கப்பட்ட மிகப் பிரபல்யமான நாவல்களாக 1960 களில் அவைகள் பேசப்பட்டு வந்தன. ஒரு முற்போக்கு எழுத்தாளராக இலக்கிய விமர்சனராக கதாசியராக, வானொலி நாடகங்களை அந்தக்காலங்களில் எழுதி ஒரு பேரோடும், புகழோடும் வாழ்ந்து வந்தவர். 

பின்பு இந்தியாவில் குடியேறி பல வருடங்களாக வாழ்ந்து அங்கும் அவரின் தமிழ் இலக்கிய துறைக்கும் மகத்தான பங்களிப்புகளை வழங்கிய அளப்பரிய அர்ப்பணிப்புகளையும் செய்து வந்த இவர் இந்நாட்டுக்கும் புகழ் சேர்த்த முன்னோடிகளில் மூத்த முதும் பெரும் எழுத்தாளராவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

அன்னாரின் பழைய மாணவன் என்ற வகையில் இந்த இலங்கை எழுத்தாளர்களுக்கு முத்தாக விளங்கிய அவரின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுபதாபத்தை தெரிவிப்பதாக தமிழ், இலக்கிய ஆர்;வலுரும் முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் பொதுச் செயலளாரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான நாவலர் எஸ்.எம்.ஏ.கபூர் அவர்கள் அன்னாரின் குடும்பத்திற்கு அனுப்பி வைதுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய இலக்கிய மகாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு அம்மகாநாட்டில் இந்தியாவிருந்து பங்குபற்றிய இலங்கையின் தலை சிறந்த மூத்த எழுத்தாளரும் அண்மையில் மறைந்த எஸ்.பொன்னுத்துரைக்கு அவரிடம் படித்த பழைய பாடசாலை மாணவரும் முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகச்செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமானஇ நாவலர் எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட போது  பிடிக்கப்பட்ட வரலாற்றுப் புகைப்படம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :