ஹுனைஸ் எம். பிக்கு எதிராக கண்டன தீர்மானம்! முசலி பிரதேச சபையில் பிரேரணை

அபூ பத்ரி-

மைச்சர் றிஷாத் பதியுதீன் மற்றும் முசலி பிரதேச சபை தலைவர் ஆகியோர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் ஹுனைஸ் எம். பியின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து முசலி பிரதேச சபையில் பிரேரணை ஒன்று சமர்பிக்கப் படவுள்ளது.

முசலி பிரதேச சபையின் அமர்வு எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதன்போது, குறித்த கண்டன பிரேரணை சமர்பிக்கப் பட்டு நிறைவேற்றப் படவுள்ளது.

முசலி பிரதேச சபையின் உப தவிசாளர் எஸ்.எம்.எம்.பைரூஸ் தலைமையில் இன்று இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின்போது மேற்படி பிரேரணையை சமர்பிப்பது குறித்து முடிவெடுக்கப் பட்டுள்ளது.

முசலி பிரதேச சபையின் உப தவிசாளர் எஸ்.எம்.எம்.பைரூஸ் தலைமையில் சபையின் உறுப்பினர்களான அப்துர் ரஹ்மான், சுபியான், காமில் மற்றும் சுல்பிகார் ஆகியோர் இது தொடர்பில் விடுத்துள்ள கூட்டறிக்கையில், எமது சபையின் தவிசாளர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் ஹுனைஸ் எம். பியின் கருத்துகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஹுனைஸ் எம். பி அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி கருத்து வெளியிட்டிருப்பது வன்னி மாவட்ட மக்கள் மத்தியில் மட்டுமன்றி நாடு பூராகவுமுள்ள முஸ்லிம்களையும் முகவும் வேதனை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் வழிகாட்டியான அமைச்சர் றிஷாதை, பகிரங்கமாக விமர்சித்திருப்பதானது அவரது நயவஞ்சக தனத்துக்கும், நம்பிக்கை துரோகத்துக்கும் சிறந்த எடுத்தக் காட்டாகும். வாக்களித்த மக்களிடம் எதுவும் கூறாது அவர்களை ஏமாற்றி விட்டு அவர் கட்சி தாவியமை மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகவே பார்கின்றோம். 

முசலிப் பிரதேசப் பகுதிகளில் எதிர்வரும் காலங்களில் அவரது எந்தவொரு செயற்பாட்டுக்கும் நான் ஒருபோதும் உதவியோ ஒத்துழைப்போ வழங்கப் போவதில்லையென்றும் குறித்த கூட்டறிக்கையில் முசலி பிரதேச சபை உறுப்பிர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :