பொன்சேக்கா முகம் கொடுத்ததை விட அதிக விளைவுகளை தாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்-மைத்திரி

ரத் பொன்சேக்கா தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை, அரசாங்கக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் தாம் மிகுந்த மன வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

அதுகுறித்து தம்மால் எதுவும் செய்ய முடியாது போனதாக, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தது. 

எது எவ்வாறு இருப்பினும் பொன்சேக்கா முகம் கொடுத்ததை விட அதிக விளைவுகளை தாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என இங்கு தொடர்ந்து உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன கூறினார். 

எனினும் கோழைபோல் வாழ்வதை விட உண்மைக்காக உயிரை பணயம் வைப்பது மேல் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :