எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பல்வேறு தரப்புக்களுடன் மேற்கொண்டுள்ள உடன்படிக்கைகள் தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் அரசியல் குழுவின் உறுப்பினர் பியசிரிய விஜேநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் சந்திரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் உண்மையானதா? அல்லது, ஜாதிக்க ஹெல உறுமயவுடன் செய்து கொண்ட உடன்படிக்கை உண்மையானதா?
ஒரே விடயம் தொடர்பில் இரண்டு உடன் படிக்கைகளை செய்து, நாட்டை ஏமாற்றும் செயல் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த உடன்படிக்கைக்கு அப்பால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சர்வதேசத்தில் இயங்கும் தமிழ் புலம்பெயர்வாளர்களுடன் மைத்திரிபால சிறிசேன இரகசிய உடன்படிக்கையை செய்துக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது.
எனவே அந்த உடன்படிக்கைகளை வெளிக்கொணர வேண்டும் என்று பியசிறி விஜயநாயக்க கேட்டுக் கொண்டார்.
எவ்வாறாயினும் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஜாதிக்க ஹெல உறுமயவின் செய்தியாளர் சந்தப்பின் போது, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கருத்து வெளிடுகையில், தாம் இரகசியமான எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவில்லை என்று கூறி இருந்தார்.
தாம் எவருடனும் இரகசிய உடன்படிக்கையை செய்துக் கொள்ளவில்லை.
அவ்வாறாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை.
இந்த பொய்களை கூறுவதன் மூலம் அரசாங்கம் தேர்தல் பிரசாரங்களில் எந்த அளவுக்கு தோல்வி கண்டுள்ளது என்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அலரிமாளிகையில் தேர்தல் பிரசார குழுவில் உள்ள பலர் தற்போது அதில் இருந்து விலகி வருகின்றனர்.
அவர்களில் சிலர் தம்மோடு இணைந்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment