அண்மையில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் கிழக்கு மாகாண சமூக பொருளாதார அபிவிருத்திக்குழுத் தலைவரும் அக் கட்சியின் பேச்சாளருமான அஹமட் புர்கான் அவர்களை எமது இம்போட் மிரர் தொடர்பு கொண்டு கேட்ட போது கீழ்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் ஏற்படப்போகும் மறுமலர்ச்சியைக் கருத்தில் கொண்டு மக்களின் அபிமானத்தையும் விருப்பத்திற்கும் அமைவாக எமது கட்சியான தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி பொது வேட்பாளரை ஆதரிக்க முன்வந்துள்ளது, அதனடிப்படையில் எமது கட்சியின் சார்பில் கட்சியின் முக்கியஸ்தர் முஹீத் ஜீரான் (International Political Lobbyist and Campaign Streategist ) அவர்களினால் ஐ.தே.க யின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று கடந்த திங்கள் கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இச்சந்திப்பின் போது கட்சியின் கொள்கைகளும் கோட்பாடுகளும் கையளிளிக்கப்பட்டன. அத்துடன் இன்றைய சமூகத்தின் தேவை இருப்பு என்பன விரிவாக கலந்தாலோசிக்ப்பட்டதுடன் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடார்பான திட்டமிடல்களும் கையளிக்கப்பட்டு ஐ.தே.க முக்கியஸ்தர்களுடன் ஆராயப்பட்டது
அத்துடன் இத் திட்டங்கள் சிறந்த திட்டங்களாக வகுக்கப் பட்டுள்ளன என்றும் இவ்வாறான திட்டங்களை கிழக்கு பிரதேச அரசியல் வாதிகலால் இதுவரை காலத்தில் எடுத்துரைக்கப்படாமை கவலைக்குறிய விடயம் எனவும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் இத் திட்டங்களில் குறிப்பாக கிழக்கிலங்கையை ஏற்றுமதி வலயமாக மாற்றும் கோட்பாடு எதிர்காலத்தில் கிழக்கை ஒளிமயமாக்கும் எனவும் இது நிச்சயமாக மெச்சத்தக்கது எனவும் குறிப்பிட்டனர் என தெரித்தார்.

.jpg)
.jpg)
0 comments :
Post a Comment