த.நவோஜ்-
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக சுவிஸ் லங்காசிறி இணையத்தளத்தின் கல்விச் சமர் மூலம் கல்குடா கல்வி வலயத்தின் ஏறாவூர்பற்று-02 கல்விக் கோட்டத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் புதன்கிழமை செங்கலடி மத்திய கல்லூரியிலும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் செங்கலடி மத்திய கல்லூரி அதிபர் கே.அருணாச்சலம், கோட்டக் கல்வி அதிகாரி போ.சிவகுரு, 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் மாணவர்களை சித்தி பெறச் செய்த ஆசிரியர்கள், சித்தி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்குடா கல்வி வலயத்தில் 172 மாணவர்கள் சித்தியடைந்தனர். இதில் ஏறாவூர்பற்று கோட்டத்தில் சித்தி பெற்ற 81 மாணவர்களுக்கு சுவிஸ் லங்காசிறியின் கல்விச் சமர் நிதி உதவி மூலம் ஒரு மாணவருக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வீதம் கல்வி உபகரணம் கொள்வனவு செய்வதற்கான படிவம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனின் நிதி மூலம் மாணவர்களை பாராட்டி நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு சித்தி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் உபகரணம் கொள்வனவு செய்வதற்கான படிவம் மற்றும் இவர்களுக்கான நினைவுச் சின்னம் என்பன வழங்கி வைக்கப்பட்டிருந்தது. அத்தோடு ஐந்தாம் தரம் கல்வி கற்பித்த சில ஆசிரியர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் சொந்த நிதியில் இருந்து சிறுதொகைப் பண உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உதவியை வழங்கிய சுவிஸ் லங்காசிறியின் இணையத்தள நிருவாகத்தினருக்கும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கும் அதிபர், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் தங்களுடைய நன்றிகளை தெரிவித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment