நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை 24 மணிநேரத்தில் பிரதமராக்குவேன் என ஒருபோதும் கூறவில்லை என தெரிவித்த பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தினால் திரிவுபடுத்தி கூறப்படுவதே இந்த விடயமாகும் என்றார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாம் புதிய அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து எம்முடன் பலர் வந்து இணைந்துகொண்டிருக்கின்றனர். அந்தவகையில் நவீன் திஸாநாயக்க எம்முடன் இணைந்துகொண்டமையினால் நான் மகிழ்ச்சியடைகின்றேன். நவீன் திசாநாயக்கவின் தந்தையான காமினி திசாநாயக்கவை போன்றே திஸாநாயக்கவும் திறமையான ஒருவர். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட அமைச்சு பதவிகளை வைத்து திறமையை வெளிப்படுத்தவும் மக்களுக்கு சேவையாற்றவும் முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது எங்களோடு இணைந்துள்ளார்.
நாட்டில் மக்கள் மூன்று நேரமும் சாப்பிட முடியாமல் கஸ்டப்படுகின்றனர். ஆனால் அரசாங்கம் தேர்தலை நோக்காக கொண்டு அவர்களின் வாழ்க்கையில் தற்காலிக மாற்றத்தை கொண்டு வரலாம். ஆனால் நான் மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவேன் என்றார்.

0 comments :
Post a Comment