கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள நலன்புரி நிலையத்தினால் நடாத்தப்பட்ட அதிஷ்டலாப குழுக்கள் கடந்த வாரம் கிழக்குமாகாண சுகதார அமைச்சர் எம்.ஐ.மன்சூர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் டாக்டர் திருமதி ஸ்ரீதர் அவர்களும் அமைச்சின் செயலாளர் கருனாகரன் அவர்களும் கலந்துகொண்டனர்.
இவ் வைபவத்தில் அமைச்சின் செயலாளர் கருனாகரன் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது அதிஷ்டசாலி அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலை ஊழியர் ஏ.வி பசீரா தெரிவு செய்யப்பட்டார்.
இவ் உத்தியோகத்தருக்குரிய பரிசுப்பொருள் அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அதிதியட்சகர் டாக்டர் கே.எல்.நக்பர் அவர்களினால் உத்தியகபூர்வமாக இன்று உரிய உத்தியோகத்தருக்கு கையளிக்கப்பட்டது.

0 comments :
Post a Comment