கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் 118 திவிநெகும குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி!

பி.எம்.எம்.ஏ.காதர்-

ல்முனை பிரதேச செயலக திவிநெகும பிரிவின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 118 திவிநெகும குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கிய நிகழ்வு இன்று (01-12-2014) மாலை கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்முனை பிரதேச திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும,; திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திவிநெகும குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்தார்.

32 இலட்சத்து 75000 ரூபா நிதியில் 45 சோஜி,31 சிக்சாட்; 42 சாதாரன சிங்கர் ஆகிய ரகங்களைச் சார்ந்த தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்,ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர்அலி, மற்றும் கல்முனை பிரதேச செயலக திவிநெகும அதிகாரிகளான ஏ.சி.அன்வர்,எஸ்.எஸ்.பரீரா  எம்.எம்.எம்.முபீன் உள்ளீட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொணடனர்.

இந்த நிகழ்வை  கருத்திட்டங்களுக்குப் பொறுப்பான திவிநெகும உத்தியோகத்தர் யு.எல்.  தௌபீக், சமூக அபிவிருத்திக்குப் பொறுப்பான திவிநெகும உத்தியோகத்தர்  என்.எம்.நௌசாத் ஆகியோர் நெறிப்படுத்தி பயனாளிகளுக்கு உரிய முறையில் தொழில்  உபகரணங்கள் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :