கல்முனை தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீசின் அதீத முயற்சியின் பயனாக கல்முனைக்குடியின் மேலும் ஒரு வீதியான அலியார் வீதிக்கு “காபெட்” இடும் பணிகள் நேற்று (2014.11.18)ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாநகர சபை உறுப்பினர் பறக்கத்துல்லாவின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டு சுமார் 6 கோடி பெறுமதியான இவ் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இவ் வேலைத் திட்டம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் அயராத முயற்சியின் பயணாக பெருந்தெருக்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்று பொறியியலாளர் ஜாபிர், கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியிலாளர் சபீக் ஆகியோருடன் கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வைத்தியர். எஸ்.எம். ஏ. அஸீஸ், முஸ்லீம் காங்கிரஸின் கல்முனைக்குடி மசூறா சபை தலைவர் கரீம் ஹாஜியார் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இவ்வீதி கடந்த 20 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாது குன்றும் குழியுமாக இருந்த அதே வேளை மழைகாலங்களில் நீர் அதிகளவில் தேங்கி நிற்கும் பாதையாகவும் இருக்கிறது.
இவ் வீதியின் பணிகளின் போது மக்களின் ஒத்துழைப்பினை பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் இவ்வீதி இன்னும் ஓரிரு மாதங்களில் முழுமையாக வடிகான்களுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்படும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர் மக்களிடம் உறுதியளித்தார்.

.jpg)
.jpg)
0 comments :
Post a Comment