எம்.ஐ.பிர்னாஸ்-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும திணைக்களத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் முன்மொழிவின் பிரகாரம் காரைதீவு பிரதேச செயலகப்பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 19 பயனாளிகளுக்கு முதல் கட்டமாக வாழ்வாதாரப் பொருட்கள் புதன்கிழமை மாலை சமூர்த்தி வங்கியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச திவிநெகும உத்தியோகத்தர் எஸ்.எம்.அம்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,காரைதீவு பிரதேச செயலக அபிவிருத்திக்குழுத்தலைவருமான பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு பயனளிகளுக்கான வாழ்வாதாரங்களை வழங்கி வைத்தார்.
7 பேருக்கு தையல்மெசின்,5 பேருக்கு மீன் வியாபாரத்திற்கான பொருட்கள்,4 பேருக்கு மாஇடிக்கும் மெசின்,3 பேருக்கு ஆடுகள் இதன் போது வழங்கிவைக்கப்பட்டன.
இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியக இணைப்பாளர் எம்.ஐ.றியாஸ்,சமூர்த்தி முகாமைத்துவப்பணிப்பாளர் ஆர்.மதியழகன் உட்பட அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment