பொத்துவிலிலிருந்து வாழைச்சேனை வரையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் அங்கம் வகிக்கும் வரையறுக்கப்பட் ட தென்கிழக்கு தனியார் பேரூந்து பஸ் கம்பனியைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தீர்வு பெற்றுத் தருவதாக அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லாஹ் ஸக்கி உறுதியளித்தார்.
நவரையறுக்கப்படட ; தெ;ன் கிழக்கு தனியார் பேரூந்து கம்பனியைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் தாங்கள் ; எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லாஹ் அஹமட் ஸக்கி அவர்களைச் சந்தித்து விளக்கியதோடு இதற்கான நிரந்தர தீர்வொன்றினைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தபோதே மேயர் மேற்கண்ட உறுதி மொழியை வழங்கினார்.
வரையறுக்கப்பட்ட தென்கிழக்கு தனியார் பேரூந்து கம்பனியின் பணிப்பாளர் ஏம்.ஏ.ஏ.அஸ்பர் தலைமையிலான குழுவினர் ;; நேற்று (03.11.2014) அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லாஹ் அஹமட ஸக்கி அவர்களைச் சந்தித்து நீண்ட காலமாக தாங்கள் எதிர் நோக்கும் பின்வரும் பிரச்சினைகளைப் பற்றி விளக்கியதோடு எழுத்து மூலமும் வழங்கியதோடு, நல்ல தீர் வொன்றினைப் பெற்றுத் தந்து மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க உதவுமாறு கோரினார்கள்.
பிரச்சினைகள்,
(01).2014 ஜனவரி 15ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட நேர அட்டவணையின் கீழ் அரச, தனியார் பஸ் வண்டிகளை ஈடுபடுத்துவதற்கான அனுமதியினை அரசாங்கம் வழங்கியிருந்தும் கிழக்குப் பிராந்தியத்தில் கல்முனையிலிருந்து திருகோணமலை மற்றும் அம்பாரைக்கும் , அக்கரைப்பற்றிலிலிருந்து அம்பாரைக்கும் இ.போ.ச. பஸ் வண்டியும் தனியார் பஸ் வண்டியும் இணைந்து ஒண்றிணைந்த சேவையில் ஈடுபடுகின்ற நிலையில் ஏனைய இடங்களான வாழைச்சேனை, மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் போன்ற இடங்களில் இம் முறையை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதப்படுத்துகின்றனர்.
(02).மேலும் ஐந்து நிமிடத்திற்குள் ஒவ்வொரு அரச வண்டியும் செல்வதனால் தனியார் பஸ்
வண்டிக்கு நேர ஒதுக்கீடு இல்லாமல் உள்ளது. இதனால் நாளொன்றுக்கு ரூபா 500 கூட மிசு;சம் இல்லாமையால் பினான்ஸ் கட்ட முடியாமல் பல இலட்ச ரூபாய்க்கு பஸ் உரிமையாளர்கள் கடனாளியாகவும், பஸ் வண்டிகளை இழந்தும் வருகின்றனர். அது மாத்திரமல்லாமல் போக்குவரத்துப் பொலிஸாரினால் தண்டப் பணமும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கே அடிக்கடி விதிக்கப்படுகின்றது. என்றும் தெரிவித்தனர்.
இவைகளைக் கேட்டறிந்த மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி அவர்கள் இவ் விடயங்களை உடனடிhக கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளரையும், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் அக்கரைப்பற்று சாலையின் முகாமையாளரையும் சந்தித்து இதற்கான காத்திரமான முடிவை செய்து தருவேன் என்று வாக்குறுதியளித்தார்.

0 comments :
Post a Comment