மு.கா. தனி கரை­யோர மாவட்ட கோரிக்­கை­யா­னது இன­வா­தத்தின் பிர­வே­ச­மாகும்-அநுர குமார திஸா­நா­யக்க

மக்கு எதி­ரான முஸ்­லிம்­களின் விரோ­தத்தை குறைப்­ப­தற்­கா­கவே மு.கா. தனி கரை­யோர மாவட்டத்தை கோரு­கி­றது. இத்­த­கைய கோரிக்­கை­யா­னது இன­வா­தத்தின் பிர­வே­ச­மாகும். எனவே நாட்டை பிள­வு­ப­டுத்தும் எந்­த­வொரு கோரிக்­கை­யையும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்டோம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அநுர குமார திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

நாட்டில் ஒற்­று­மை­யான பரி­பா­ல­னமே தேவை. இருப்­பினும் பிரச்­சி­னை­களின் போது முஸ்­லிம்­க­ளுக்­காக குரல் கொடுக்­காத மு.கா. மீளவும் இனங்­க­ளி­டையே பிரி­வி­னையை ஏற்­ப­டுத்த முயற்­சிப்­ப­தா­கவும் அவர் குற்றம் சுமத்­தினார்.

ஜே.வி.பி. தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் முன்­வைக்­கப்­பட்ட கரை­யோர மாவட்ட பரி­பா­லன கோரிக்கை ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய கோரிக்­கை­யல்ல. இந்த கோரிக்கை முஸ்­லிம்­களால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கை­யல்ல. இன­வாத அர­சி­யலை மேற்­கொள்ளும் முஸ்லிம் காங்­கி­ரஸின் கோரிக்­கை­யாகும்.

நாட்டில் முஸ்­லிம்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வந்த தரு­ணத்தில் அமைதி அர­சி­யலை மேற்­கொண்டு வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தற்­போது விடுத்­துள்ள கோரிக்கை நகைப்­புக்­கு­ரி­யது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை இந் நாட்டு முஸ்­லிம்கள் நிரா­க­ரித்து விட்­டனர். இந்த விரோ­தத்தை மறுக்­க­டிக்­கவே முஸ்லிம் காங்­கிரஸ் இவ்­வாறு கோரிக்கை விடுக்­கி­றது.

நாட்டில் ஐக்­கியம் மிளிர்ந்து வரும் இத்­த­ரு­ணத்தில் இக் கோரிக்கை விடுத்­தி­ருப்­பது நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் பிரி­வினை வாதம் மீளவும் தோற்­று­விக்க கார­ண­மாக இருக்கும். இத்­த­கைய பிர­தி­ப­லனை எதிர்­பார்த்­த­தா­கவே மு.கா. வின் கோரிக்கை அமைந்­துள்­ளது. 

எனவே, நாட்டை பிள­வு­ப­டுத்தும் எந்­த­வொரு கோரிக்­கை­யையும் ஜே.வி.பி. ஏற்­காது. அனைத்து இனங்­களும் ஒன்­றி­ணைந்து தீர்­மா­னங்­களை எடுக்கும் நாட்­டையே நாங்கள் எதிர்­பார்க்­கிறோம். எனினும் மாவட்ட கோரிக்கைக்கு பதி­லாக பெறு­மதி உரிமை கேட்­டி­ருந்தால் அது நியாயமானது. இக்­கோ­ரிக்­கையை ஏற்­றுக்­கொள்ள மாட்டோம்.

கொஸ்­லந்­தையில் ஏற்­பட்ட மண்­ச­ரிவு தொடர்பில் 2 வரு­டத்­திற்குள் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்ட போதிலும் இது தொடர்பில் குறித்த பிரதேசத்திலிருந்து மக்களை அகற்ற எவ்வித காத்திரமான நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :