இந்தியா அரசாங்கம் வடக்கு, கிழக்கு, மற்றும் மலையகத்திலும் நிர்மாணிக்கும் 50 ஆயிரம் வீடுகள் உதவித் திட்டத்தினை தனியார் நிறுவனங்களுக்கு கட்டுமாண ஒப்பந்தத்தை வழங்காது இலங்கையில்
உள்ள அரச நிறுவனமான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக இந்த வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வீடமைப்பு அமைச்சரிடம் அமைச்சர் விமல் வீரவன்ச கோரிக்கை.
தென் கொரியாவில் நடைபெறுகின்ற 30 நாடுகளின் ஆசிய பசுபிக் வீடமைப்ப நகர அபிவிருத்தி மாநாட்டின்போது இந்திய வீடமைப்பு நகர அபிவிருத்தி பாராளுமன்ற விவகார அமைச்சர் வெங்கையா நாயூடுவைச் சந்தித்து உரையாடும்போதே மேற்கண்ட கோரிக்கையை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களுக்காக 50ஆயிரம் வீடுகள் இந்திய அரசாங்கத்தில் நிர்மாணிக்கும் திட்டம் ஒப்பந்தக்காரர்களினால் நெடுங்காலம் எடுப்பதாகவும் ஒரு வீட்டுக்காக 7 இலட்சம் செலவிடுவதாகவும் இதனால் உரிய தரத்தில் இவ் வீடுகள் நிர்மாணிக்காது ஒப்பந்தக்காரர்கள் இலாபம் மீட்டுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஆனால் அரசின் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் இத் திட்டத்தினை கையளித்தால் மிகத் திறமையாகும், குறைந்த செலவில் வீடுகளை நிர்மாணிக்க முடியும் எனவும் அமைச்சர் விமல் தெரிவித்தார். யுத்தத்தினால்
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment