பொது வேட்பாளர் எனும் பூதம் உள்வீட்டிலிருந்து வெளிப்படுமா? அயல் வீட்டிலிருந்து வெளிப்படுமா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-

னாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியினை புதன் கிழமை அரசு அறிவிக்கும் என்ற அரசின் செய்தியைத் தொடர்ந்து எப்போது தேர்தல் நடைபெறுமோ? என ஆவலோடு எதிர்பார்த்து நிற்கும் இலங்கை வாழ் மக்கள் பொது வேட்பாளர் யார்?என்பதை அறிய இதை விட பன் மடங்கு ஆவலுடன் உள்ளார்கள் என்பதே உண்மை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவா?ஐ.தே.க இனுடைய தலைவர் ரணிலா?சரத் பொன்சேகாவா?சிராணி பண்டாரநாயக்கவா?அர்ஜுனா ரணதுங்கவா?கருவா?சஜித்தா?மாதுலவாவே சோபித தேரரா?முன்னாள் பிரதமர் ரத்னசிறி விகரம நாயக்கவா?வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனா?அல்லது அரச தரப்பு யாராவதா?என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

பொது வேட்பாளராய் தற்போது களத்தில் ஒலிக்கும் நாமங்களாய் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இனதும் கரு ஜெயசூரிய இனதும் நாமங்கள் அதிகம் ஒலிக்கப்படுகின்ற போதும் இடை இடையே ஐ.தே.க இனுடைய தலைவர் ரணிலினதும் நாமம் வந்து போகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தான் போட்டியிடப் போவதில்லை எனக் கூறியுள்ள போதிலும் இவர் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.ஆட்சிப் பரம்பரையிலிருந்து வந்து ஆட்சி செய்த வாரிசல்லவா இவர்?எனினும்,இவர் களமிறங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவென்றே கூற வேண்டும்.ஐ.தே.க இனர் மாத்திரமே ஐ.தே.க இனுடைய தலைவர் ரணிலை களமிறக்க முயற்சிக்கிறார்கள்.பொதுக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்தத் தேவையான பலரும் இதனை எதிர்ப்பதால் அவர் போட்டியிடுவதற்கான சாத்தியாக கூறுகள் மிகவும் அரிது.அப்படியானால் அடுத்து இருக்கும் கருவே பொது வேட்பளராகலாம் என பலரும் நம்புகின்றனர்.எனினும்,யாவரும் முழு மனதோடு இவரைத் தகுதியானவர் என ஏற்றுக்கொண்டதாக இல்லை.ஏதோ,இருப்பதில் அனைவரையும் திருப்திபடுத்தக் கூடியவர்.என்பதால் இவர் பக்கம் அனைவரும் சாய்ந்துள்ளனர்.

பொது வேட்பாளர்..!பொது வேட்பாளர்..!என யாவரும் தலையைப் பிய்த்துக் கொண்டு திருந்தாலும் அவ்வளவு பெரிதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பொது வேட்பாளர் விடயத்தை அலட்டிக் கொண்டதாக இல்லை என்றே கூற வேண்டும்.இதற்குள் பல மர்மங்களும் புதைந்தும் இருக்கலாம்.ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை வீழ்த்த அரச பிரமுகர்கள் பலரை பொதுக் கூட்டணிக்குள் உள்வாங்க பலரும் முயற்சிக்கின்றனர்.அரசில் அங்கம் வகிக்கும் பாரிய தலைகளும் சந்திரிக்காவின் வருகையால் கூட்டணி பக்கம் தாவலாம் என பலரும் நம்புகின்றனர்.தற்போதுள்ளவர்களை விட ஜனாதிபதி வேட்பாளருக்கு மிகத் தகுதியானவரும்,யாவரும் ஏற்றுக்கொள்ளும் திறமை மிகுந்த ஒருவரும் அவ் வருகைக்குள் இருக்கலாம்.அந்த நபரைக் குறிவைத்தே சந்திரிக்கா தனது நேரத்தை இவ் விடயத்தில் செலவு செய்யாது இருக்கலாம்.அண்மையில் காலம் வரும் போது அந்த முக்கிய நபர் யார் எனக் கூறுகிறேன் என சந்திரிக்கா கூறியதாக கதை பரவி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சந்திரிக்கா ரணிலைப் போட்டி இட வேண்டாம் என அறிவுரை கூறி இருக்கின்றார்.அப்படியானால் அவரின் தெரிவு வேறு எங்கேயோ உள்ளது என்பதைத் தெளிவாக்குகிறதல்லவா?ஏனையோரை பொது வேட்பாளருக்கு குறி வைப்பதில் தடையாக அமையப் போபவர் எதிர்க் கட்சித் தலைவர் ரணிலே!

தற்போது எதிர் பார்க்கப் படும் தேர்தல் மிகக் கடுமையாக அரசிற்கு இருக்கும் என்பதால் அரசு யார் அந்த வேட்பாளர் என்பதிலில் மிகவும் கரிசனை கொண்டுள்ளது.தற்போது அவ்வாறு அரசில் இருந்து வெளிப்பட இருக்கும் வேட்பாளர் வெளிப்படுத்தப்பட்டால் அந்த வேட்பாளர் எந்தெந்த வழிகளில் எல்லாம் தாக்கப் பட இயலுமோ அந்தந்த வழிகளில் தாக்கப் படலாம்.அவ்வாறான தாக்குதலைத் தவிர்க்க அவ் வேட்பாளர் நாமம் பாதுகாக்கப் படுகிறது என்றே கூற வேண்டும்.திடீர் என நாமம் வெளிப்படும் அரசால் எதுவும் செய்ய இயலாது போவது மாத்திரமின்றி மக்கள் மனங்களை பொதுக் கூட்டணி வெல்லவும் வழி வகுக்கலாம்.

அரசு ஜனாதிபதி தேர்தலினை திடீர் என நடாத்தி இருக்கும் என்றால் பொதுக் கூட்டணியோ பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க நேரமில்லாது சற்று சிதறி இருக்கும்.அரசின் தம் பட்டம் அரசிற்கே ஆப்பாக மாறி விட்டது.

பொது வேட்பாளர்..!பொது வேட்பாளர்..! என்றலைந்தவர்கள் தற்போது பொது வேட்பாளர் செய்ய வேண்டியவைகள் பற்றி அதீதம் கரிசனை கொள்வது பொது வேட்பாளர் என தற்போது ஒலிக்கப்படும் நாமங்களில் பொது வேட்பாளர் நாமம் இல்லை அந்த நாமம் மறைத்துள்ளது என்பதை மேலும் உறுதிப் படுத்துகிறது.அன் நாமம் அரசிலிருந்து வெளிப்படுமா?இருப்பதிலிருந்து வெளிப்படுமா?என்பவற்றிற்கு காலமே பதில் தரும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :