பி.எம்.எம்.ஏ.காதர்-
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ) மருதமுனைக் கிளையின் ஏற்பாட்டில் இவ்வாண்டு நடைபெற்ற 5ம் தர புலமைப் பரிசில் பரிட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 76 மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்குமான பரிசளிப்பு விழா எதிர் வரும் 2014-11-28ம் திகதி வெள்ளிக் கிழமை பி.ப.4.00 மணிக்கு மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் மருதமுனைக் கிளையின் தலைவர் எம்.ஐ.முகம்மட் பிராஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்; கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்து சிறப்பிக்கவுள்ளார். கௌரவ அதிதியாக ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின்(SLTJ)பொதுச் செயலாளர் ஆர்.அப்துர் றாஸிக் கலந்து கொள்கின்றார்.
மேலும் விசேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.சி.எம்.தௌபீக், எஸ்.எல்.எ.றஹீம், பி.எம்.வை.அறபாத்;, உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்சக்காப் ஆகியோரும், அதிதிகளாக அதிபர்களான எம்.எம்.ஹிர்பகான், எஸ்.எம்.எம்.அமீர், எம்.ஏ.எம்.இனாமுல்லா, ஏ.குனுக்கத்துல்லா, ஏ.ஆர்.நிஃமத்துல்லா, எம்.ஜே.அப்துல் ஹஸீப், ஏ.முகம்மட் ஜிப்ரி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொதிகளும் வழங்கப்படுவதுடன் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெறுமதியான பரிசுப் பொதிகளும் வழங்கப்பவுள்ளதாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் மருதமுனைக் கிளையின் செயலாளர் எம்.எச்.அஹமட் அஜ்மீர் தெரிவித்தார்.

.jpg)
0 comments :
Post a Comment