மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருதமுனையில் நிதி சேகரிப்பு

 
 பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனம்  ஆகியவற்றின் அனுமதியுடன் மருதமுனை ஒன்லைன் ஸ்தாபகரும், நிறைவேற்றுப்  பணிப்பாளருமான சுகையில் ஜமால்தீன் அவர்களின் ஆலோசனையில் ஒன்லைன் அணியினர்  மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லந்தை மீரியபெத்த மக்களுக்காக மருதமுனைப் பிரதேசத்தில்  சேகரித்த 2,31,601 ரூபா நிதியும் ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்களும் ஒன்லையினின்  சிரேஸ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் முகாமையாளர் ஏ.எச்.எம்.அஸாம் ஆகியோர்  தலைமையிலான மருதமுனை ஒண்லையின் அணியினர் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் 
தலைவர் மௌலவி கே.எல்.எம்.ஹனிபா, செயலாளர் மௌலவி ஏ.ஆர்.எம்.சுபையிர்  ஆகியோர் தலைமையிலான பிரதி நிதிகளிடம் மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலில் வைத்து  நேற்று இரவு (05-11-2014)கையளத்தனர் இந்த நிதி விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் 
செயலாளர் மௌலவி ஏ.ஆர்.எம்.சுபையிர் உறுதியளித்தார். 

ஒன்லைன் அணியின்  முகாமையாளர்; ஏ.எச்.எம்.அஸாமின் நெறிப்படுத்தலில் கடந்த நான்கு தினங்களாக ஒன்லைன்  அணியினர் இந்த நிதியை சேகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :