சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவிப் பிரிவில் அதிகூடிய சேவை வழங்கியமைக்காக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஆசிரியரும் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவிப் பிரிவன் அம்பாறை மாவட்ட உதவி ஆணையாளருமான ஐ.எல்எம். றிபாய் இன்று (06) வியாழக்கிழமை விக்டோரியாப் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வு பாலமுனை ஹிக்மா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவிப் பிரிவின் அம்பாறை மாவட்ட ஆணையாளரும் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி உப பீடாதிபதியமான எம்.எச்.எம். மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்த கொண்ட இவருக்கான பதக்கத்தைச் சூட்டி கௌரவித்தார்.
சர்வதேச சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி அமைப்பின் சிபார்சுக்கமைய இலங்கை சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி அமைப்பினால் ஐ.எல்எம். றிபாய் ஆசிரியருக்கான சின்னமும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பாலமுனை ஹிக்மா வித்தியாலய அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் கலந்து கொண்டார்.
மேலும், பாலமுனை ஹிக்மா வித்தியாலயத்தில் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி நெறி ஒன்றை நடத்தவதற்கான ஏற்பாடகள் செய்யப்பட்டுள்ளதாக சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவிப் பிரிவின் அம்பாறை மாவட்ட ஆணையாளர் எம்;.எச்.எம். மன்சூர் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment