ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவை வெற்றியடைய செய்வோம் - பிரபா கனேசன்

த.நவோஜ்-

மது நாடு யுத்தத்திற்கு பின்னர் பாரியளவில் அபிவிருத்தியைக் கண்டுள்ளது. அதனை ஜனாதிபதி தலைமையிலான எமது அரசாங்கமே செய்து வருகின்றது. அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு தகவல் தொழிநுட்ப பிரதி அமைச்சர் பிரபா கனேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியில் உள்ள பாடசாலைகளில் தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தில் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட கணணி ஆய்வு கூடங்களை திறக்கும் நிகழ்வு இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

சிறுபான்மை மக்களாகிய நாங்கள் நாட்டை ஆளும் அரசாங்கத்தோடு சேர்ந்து போக வேண்டும். எங்களுக்கு அபிவிருத்தி தேவையில்லை. எங்களுக்கு உரிமை மாத்திரம் தான் தேவை என்று ஒரு புரம் நாங்கள் ஓடிக் கொண்டு இருந்தால் ஏனைய சமுகத்திடம் இருந்து அபிவிருத்தியை இழந்து விடுவோம்.

ரயில் பாதையில் இரண்டு தண்டவாலங்கள் ஒரே சமச்சீராக செல்வது போல் உரிமை அரசியலிலும், அபிவிருத்தி அரசியலிலும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும். அப்படி பயணித்தால் தான் எங்களது சிறுபான்மை சமூகத்தை நாங்கள் இந்த நாட்டில் நல்லதொரு சமூகமாக மாற்ற முடியும்.

ஐக்கியமாக வாழ்வது என்பது பெரும்பான்மை சமுகத்திடம் மண்டியிட்டு வாழ்வதல்ல அது நமக்குத் தேவையுமல்ல மாறாக ஐக்கியம் என்பது அவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து உரிமைகளும், நாங்களும் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆகவே தற்போதைய ஜனாதிபதி அவர்கள் சரியான முறையிலே அபிவிருத்திகளை செய்து கொண்டு போகின்றார். அவரிடம் இருந்து உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

தேசத்திற்கு மகுடம் 2013 வேலைத்திட்டத்தில் தலா ஒரு பாடசாலைக்கு இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்குடாத் தொகுதியில் கல்குடா வலய கல்வி அலுவலகம் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி அலுவலகம் ஆகிய பிரிவுகளில் உள்ள பாடசாலைகளில் அமைக்கப்பட்ட கணணி ஆய்வு கூடங்களில் பிரைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயம், காயங்கேணி சரஸ்வதி வித்தியாலயம், வம்மி வட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியாலயம் என்பவற்றில் அமைக்கப்பட்ட கணணி ஆய்வு கூடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

இந் நிகழ்வுகளுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட் லெப்பை, கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.சிஸ்ரீகிருஸ்னராஜா, மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி திட்ட பணிப்பாளர் ஏ.சுதாகரன், வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.ராகுலநாயகி, ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத், வாகரை பிரதேச சபை செயலாளர் சி.இந்திரகுமார், வாகரை பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், காயங்கேணி சரஸ்வதி வித்தியாலய அதிபர் சி.காளிதாசன், வம்மிவட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் எஸ்.இந்திரன், கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியாலய அதிபர் எல்.ஆனந்தன், வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி நாவானே அபேவன்சலங்கார கிமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்





.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :