தென்கொரியாவில் நடைபெறுகின்ற வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி மாநாட்டில் அமைச்சர் விமல்


லங்கையில் மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் கீழ் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் முன்னெடுக்கும் ஜனசெவன 10 இலட்சம் வீட்டுத்திட்டத்தினை தென்கொரியாவில் நடைபெறுகின்ற வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி மாநாட்டில் கலந்து கொண்ட ஆசிய பசுபிக் நாடுகளின் அமைச்சர்கள் இத்திட்டத்தினை வரவேற்றதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

தென்கொரியாவில் சோல் நகரில் நடைபெறுகின்ற ஆசிய பசுபிக் நாடுகளின் வீடமைப்பு நகரமயமாக்கள் பற்றி நடைபெற்று வரும் மாநாட்டுக்கு கலந்துகொள்ள இலங்கை சார்பில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான குழு சென்றுள்ளது. அம்மாநாட்டில் அமைச்சர் விமல் விரவன்ச இலங்கை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத்திட்டங்கள் பற்றி 'பவர் பொயின்ட் முலம்' விளக்கமளித்து உரையாற்றினார்.

இலங்கை வீடமைப்பு மற்றும் நகர அழகுபடுத்தல் திட்டம் பற்றி மேலும் அறிந்து கொள்ளவதற்கு இம் மாநட்டில் கலந்து கொண்டுள்ள நாடுகளின் அமைச்சர்கள் தத்தமது நாடுகளின் அதிகாரிகளையும் இலங்கை அனுப்பி இத்திட்டங்களை அறிந்து கொள்வதற்கும் அதனை தத்தமது நாடுகளின் பகிர்ந்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். என அமைச்சர் விமல் வீரவன்சவின் ஊடகச் செயலாளர் பிரசாத் மன்சு அங்கிருந்து தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் முலம் வீட்டை மட்டும் நிர்மாணிக்காமல் ஒரு வீடமைப்புக் கிராமத்தை நிர்மாணித்து அவர்களுக்கு வீதி அபிவிருத்தி, சன சமுகநிலையம், நீர் மற்றும் மிண்சாரம், சிறுவர் பூங்கா மற்றும் வியாபார நிலையங்களையும் அமைத்துக் கொடுப்பதகவும் அமைச்சர் விமல் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் தற்பொழுது 5,195,331 வீடுகள் நிரந்தரமாக உள்ளன.

 அதில் 4,476,442 வீடுகள் ஓடுகள், அஸ்பெஸ்ட் சீட், கொங்கிரீட், தகரத்திலான வீடுகளும் அடங்குகின்றன. இது இலங்கையின் சனத்தொகைக்கேற்ப 82வீதமாகும். இலங்கையில் வீடற்ற குடும்பங்களாக 1,23,3370 உள்ளன. கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தின் கீழ் 6 வருடத்திற்குள் 20ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன, கொழும்பில் முடுக்கு வீடுகள் பலகை வீடுகள் கடலோர வீடுகள் என 100 தற்காலிக வீடமைப்பு திட்டங்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் கொழும்பை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் அழிக்கப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பான அழகான தொடர் மாடி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது. 

 என அமைச்சர் விமல் வீரவன்ச அங்கு வருகைதந்திருந்த வீடமைப்பு நகர மற்றும் அமைச்சர்களிடம் உரையாற்றியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :