ஏ.எச்.சித்தீக் காரியப்பர-
இஸ்லாமாபாத் சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் 40 அடி ஆழமான மலசல கூட குழயொன்றினை வெட்டுவதற்காக கொடுக்கப்பட்ட கொந்தராத்து யாருக்கும் அல்ல. கல்முனை மாநகர சபையின் அடாவடியான அவரது பெஸ்ட் பிரண்டுக்குத்தான்
இந்தக் குழியை வெட்டி தேவையான நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்கான தொழில்நுடப அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்களை கல்முனை மாநகர சபை நியமித்து இதனைக் கண்காணிக்கச் செய்திருக்க வேண்டும். ஆகக் குறைந்தது கல்முனை மாநகர சபை மேயராவது நிலைமைகளை ஒரு தடவையேனும் சென்று பார்த்திருக்க முடியும். அதனைக் கூட அவர் செய்யவில்லை. குறித்த குழி எவ்வளவு ஆழமானதும் அதற்கான பாதுகாப்பு வேலிகள் கூட இல்லையென்பதும் பகிரங்கமாகத் தெரிந்த போதும் கல்முனை மாநகர சபை அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதால் ஒரு களப்பலி கொடுக்கப்பட்டுள்ளது.
எல்லாம் முடிந்த பின்னர் குறித்த குழியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்குமாறு கொந்தராத்துகாரருக்கு கல்முனை மேயர் இப்போது உத்தரவிட்டுள்ளாராம் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்குத்தானோ?
கல்முனை மாநகர சபையினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிலவேளைகளில் கபனும் கபுறும் தேவைப்படும் என்று நான் முன்னர் கூறியது சரிதான் போலும்!

0 comments :
Post a Comment