ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
கிழக்கு மாகானத்தில் ஒரு வார காலத்துக்கும் மேலாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக ஓட்டமாவடி பிரதேசத்தில் சீரற்ற வடிகான்களை அண்டிய வீதிகளில் மழை நீர் அதிகம் தேங்கி நிற்பதனால் பொது மக்கள் பெருமளவில் அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதனாலும், உயிர்கொல்லி நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதன் காரணத்தினாலும், பிரதேச மக்களின் வேண்டுகோளினாலும் பிரச்சனையை உடனடியாக கவனத்தில் எடுத்த ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் IT.அஸ்மி, மழை நீரினால் பாதிக்கப்பட்டுள்ள அனேகமான வீதிகளை பார்வையிடச் சென்றார்.
இதன் முதற்கட்டமாக இன்று 26.11.2014 புதன் கிழமை அதிகமாக பாதிக்கப்படுள்ள ஓட்டமாவடி பிரதான பாடசாலைகளை அண்டியுள்ள வீதிகளிலும், வீடுகளிலும் தேங்கி நிற்கின்ற மழைநீரினை பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாதை ஓரத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டு பிரதான வடிகானுடன் நீரினை வடிந்தோடச்செய்யும் பணியினை அடைமழை என்றும் பாராமல் சபை ஊழியர்களுடன் உறுப்பினர் அஸ்மியும் ஈடுபட்டு வருகின்றார்.
இது சம்பந்தமாக இணைய நாளிதல்களுக்கு கருத்து தெரிவித்த உறுப்பினர் அஸ்மி, பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வருக்கின்ற அடைமழை காரணமாக இப்பணிகளை தொடர்ந்தேர்ச்சியாக செய்வதற்கு முடிவெடுத்துள்ளதாகவும், மழை நீர் தேக்ககத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எந்நேரமும் 0772498135 எனும் கைத் தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மழை நீர் தேங்கி நிற்பது சமபந்தமாக உள்ள பிரச்சனைகளை தனக்கு தெரியப்படுத்துமாறும் பொதுமக்களை வேண்டுகின்றார்..
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment