ஹாசிப் யாஸீன்-
அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையினால் கல்முனை, சாய்ந்தமருது,மாளிகைக்காடு, காரைதீவு போன்ற பிரதேச வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ள நீரில்மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன்போக்குவரத்துக்கும் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதனால் மீனவர்களின் மீன்பிடிப் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலைதெரிவிப்பதோடு மீன்பிடிப் படகுகள் வாழைச்சேனை மற்றும் ஒலுவில் துறைமுகங்களில்நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மழை தொடர்ச்சியாக பெய்து கொண்டிருப்பதால் கல்முனை, சாய்ந்தமருது பிரதேச குளங்கள்நிரம்பி மழை நீர் ஓடமுடியாமல் சல்பீனியா தாவரங்களால் தடைப்பட்டுள்ளது. இதனைஅகற்றும் பணிகளை கல்முனை நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயம்மேற்கொண்டுள்ளது.
தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருவதனால் மேற்படி பிரதேசங்கள் இருள் நிறைந்துகாணப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment