மேற்படி சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பாக அதன் தலைவர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத் உள்ளிட்ட உறுப்பினர்களான வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், சகோ.ஹானான் ஆகியோருடன் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அதன் தலைவர் அநுர திஸ்ஸநாயக, முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் நீலக்கட்சி வெல்கிறதா பச்சைக்கட்சி வெல்கிறதா என்பது முக்கியமல்ல, மாறாக இத நாட்டின் ஆட்சி முறையையும் அரசியல் கலாச்சாரமும் மாறுகின்ற சூழ்நிலை ஏற்படவேண்டும். இதையே மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தி நிற்கின்றது. ஆனால் இப்போது இருக்கின்ற மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மக்களுக்கு பல வழிகளிலும் அசௌகரிகங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆனால் அடுத்து வருகின்ற ஜனாதிபதியும் இவ்வாறான அசௌகரிகங்களுக்கு மக்களை உட்படுத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியினால் தெரிவிக்கப்பட்டது.
எனவே ஜனாதிபதித் தேர்தல் குறித்து நாம் விரிவாகச் சிந்திக்கின்றோம். மிக முதன்மையாக இந்த ஜனாதிபதித் தேர்தல் சட்டவிரோதமானது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துவோம். அதன் பின்னரும் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படுமாயின் அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து கட்சி தீர்மானிக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் சாதாரண முஸ்லிம் அரசியல் தலைவர்களுடைய செயற்பாடுகளைவிடவும் வேறுபட்டிருப்பதனை நாங்கள் அவதானிக்கின்றோம் என குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணியினர், இத்தகைய செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தை தேசிய அரசியலோடும் தேசிய நலன்களோடும் மிக நெருக்கமானதாக மாற்றியமைக்கும் என்றும் கருத்து வெளியிட்டனர்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்படி சந்திப்பினை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடுகளை வடிவமைப்பதற்காக நாட்டின் தேசிய சக்திகளோடு மேற்கொண்டு வருகின்ற சந்திப்புக்களின் வரிசையில் ஒன்றாக ஒழுங்குபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment