ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரினதும் பைல்கள் இருக்கும். அந்தப் பைல்களில் உறுப்பினர்களின் நல்லது கெட்டது என அனைத்தும் இருக்கும் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பைல் நாட்டு மக்களிடம் உள்ளது. அதற்கான தமது நிலைப்பாட்டை மக்கள் காட்டுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்
அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கட்சியின் உறுபபினர்கள் அனைவரினதும் பைல்கள் இருக்கும். அந்தப் பைல்களில் உறுப்பினர்களின் நல்லது கெட்டது என அனைத்தும் இருக்கும். முக்கியமாக என்னுடைய பைலில் விண்ணப்பபடிவம் முதல் அனைத்து விடயங்களும் இருக்கும். நான் தவறுகள் செய்திருந்தால் அந்த விடயமும் இதில் இருக்கும். எனது சாதனைகளும் இருக்கும். அனைத்து உறுப்பினர்கள் தொடர்பாகவும் பைல்கள் இருக்கும்.
கட்டாயம் உறுப்பினர்கள் தொடர்பாக பைல்களை பேணவேண்டும். அதிலிருந்து அந்த உறுப்பினரின் அனைத்து விபரங்ளை பெறலாம். அனைத்து உறுப்பினர்களினதும் பைல்களும் இருக்கும். ஜனாதிபதியின் பைல் மக்களிடம் உள்ளது. அது தொடர்பில் யாரும் குழப்பமடையவேண்டியதில்லை. இது சாதாரண நடைமுறையாகும்
ஹுனைஸ் பாருக்
பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் அரசாங்கத்துடன் பிரசசினை காரணமாக வெளியேறவில்லை. அவரது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே சென்றுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் வரலாம். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக்குக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேட்பு மனு கொடுக்காமல் விடலாம். எனவே அவர் அவ்வாறான தீர்மானத்தை எடுத்திருக்கலாம்.
பஷிலே கட்சியை மறுசீரமைத்தார்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பொறுத்தமட்டில் மைத்திரிபால சிறிசேன பொதுச் செயலாளராக இருந்த காலத்தில் கட்சியை உரிய முறையில் மறுசீரமைக்கவில்லை. பெண்கள் அணி இளைஞர் அணி என்பன செயற்திறனாக செயற்படவில்லை. ஆனால் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கட்சியின் தேசிய அமைப்பாளராக வந்தவுடன் அவர் கட்சியை கட்டியெழுப்பினார். பெண்கள் அணி இளைஞர் அணி என்பன செயற்திறனாக செயற்பட ஆரம்பித்தன. கீழ் மட்டத்தில் கட்சி எழுச்சிபெற ஆரம்பித்தது.
முஸ்லிம்களுக்கு பிரச்சினை
பொது பல சேனா அமைப்பினால் நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி தீர்வுகாணலாம் என்றார்.

0 comments :
Post a Comment