அக்கரைப்பற்று ஜும்ஆ புதுப் பள்ளி வாயல் அபிவிருத்திக்கு அம்பாரை அரசாங்க அதிபர் உதவி!

 நிஸ்மி-

க்கரைப்பற்று ஜும்ஆ புதுப் பள்ளி வாயல் அபிவிருத்திக்கு அம்பாரை அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் ஐந்து இட்சம் ரூபா நிதியினை வழங்கியதோடு, ஆயிரம் லீட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பிளாஸ்ரிக் தண்ணீர் கொள்கலன்களையும் வழங்கியுள்ளார். 

ஜனாதிபதியின் இணைப்பாளர் தொழில் அதிபர் அல்-ஹாஜ் எம்.ஐ.நிர்பான் அவர்களின் கோரிக்கையை ஏற்று அம்பாரை அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் அவர்கள் தேயட்ட கிருள அபிவிருத்தி நிதியிலிருந்து அக்கரைப்பற்று ஜும்ஆ புதுப் பள்ளி வாயலுக்கு ஐந்து லெட்சம் ரூபா நிதியை வழங்கியதோடு, ஆயிரம் லீட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பிளாஸ்ரிக் தண்ணீர் கொள்கலன்களையும் வழங்கினார்.

நிதி மற்றும் தண்ணீர் கொள்கலன்கள் முதலியவைகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) திங்கட்கிழமை அம்பாரை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடை பெற்றது. நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், அக்கரைப்பற்று ஜும்ஆ புதுப் பள்ளி வாயல் தலைவர் அல்-ஹாஜ் ஏ.எல்.அப்துல் றஸீட், செயலாளர் ஏ.எல்.ஜுனைதீன் (எம்.எம்.சி), பொருளாளர் ஏ.எல்.தௌபீக், உப செயலாளரும், ஜனாதிபதியின் இணைப்பாளருமான எம்.ஐ.நிர்பான், நிருவாகச் செயலாளர் எம்.எச்.எம்.தாஸீம், பள்ளிவாயல் மௌலவி ஆர்.ஏ.பாரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அரசாங்க அதிபரிடமிருந்து பள்ளி வாயலின் சார்பில் செயலாளர் ஏ.எல்.ஜுனைதீன் (எம்எம்சி) தேயட்ட கிருள நிதியிலிருந்து ரூபா ஐந்து லெட்சம் (500,000.00) வழங்குமாறு அக்கரைப்பற்று பிரதேச செயலாளரை அறிவுறுத்தும் கடிதத்தினை வழங்கியதோடு தலைவர் அல்-ஹாஜ் ஏ.எல்.அபதுல் றஸீட் அவர்களிடம் தண்ணீர்க கொள்கலன்களையும் கையளித்தார்.

மௌலவி ஆர்.ஏ.பாரிஸ் அவர்கள் நாட்டுக்கும், மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கும், அரசாங்க அதிபருர் முதலியோர்களுக்காக விஷேட துஆப் பிரார்த்தனை செய்தார்.

இதற்கான ஒழுங்குகளை ஜனாதிபதியின இணைப்பாளரும், தொழில் அதிபருமான ;எம்.ஐ.நிர்பான் செய்திருந்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :