பைஷல் இஸ்மாயில்-
கொழும்பு மட்டக்குளியைச்சேர்ந்த காலஞ்சென்ற சுடலை மணி, சண்முக வடிவு ஆகியோரின் புதல்வி எஸ்.ஜெயராணி அகில இலங்கை சமாதான நீதிபதியாக கொழும்பு மாவட்ட நீதி மன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை கொழும்பு சென் ஆன்ஸ் கல்லூரியிலும், உயர்கல்வியை வெல்லவத்தை சைவ மங்கையர் கல்லூரியிலும் கற்று இன்று கொழும்பு மட்டக்குளி செந்தோமஸ் மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையாற்றுகிறார்.
தனது வாழ்வில் கலைத்துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் கலை, கலாச்சார, சமய விடையங்களில் அதிக ஆர்வத்துடன் சமூக அமைப்புக்களிலும் உறுப்பினராக செயற்பட்டுவருகிறார்.
இவருக்கான அகில இலங்கை சமாதான நீதிபதிக்குரிய படிவத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், இவரிடம் கையளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment