பொதுவேற்பாளரை தீர்மாணிக்க முடியாமல் சண்டை போடும் எதிர் கட்சி; ஊடகவியலாளர் மாநாட்டில் விமல்

அஸ்ரப் ஏ சமத்-

னாதிபதித் தேர்தலின் எதிர்க்கட்சியின் பொதுவேற்பாளர் யார் என்று இன்னும் தீர்மாணம் எடுக்க முடியாமல் அவர்களுக்குள்ளேயே பிரச்சினையும் பிரிவும் குத்து வெட்டுக்களும் இடம்பெற்று வருகின்றது. 

இன்று(16ஆம் திகதி) ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு அமைச்சர் விமல் விரவன்சவின் பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்ணனிக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். இம்மாநாட்டில் முஹமட் முசம்மிலும் கலந்து கொண்டார்.

விமல் வீரவன்ச அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்-

ஜே.வி.பி சொல்கின்றது சரத் என். சில்வாவை நிறுத்துங்கள். ஆனால் ஜ.தே.கட்சி சொல்கின்றது எங்களுக்கு இந்த நாட்டில் 40 வீதமான வாக்குகள் இருக்கின்றது. நாங்களே பொதுவேற்பாளரை நிறுத்துவோம். எனச் சொல்;லி வருகின்றது. அப்படியென்றால் பொதுவேற்பாளராக வருபவர் ஜ.தே.கட்சியின் உருப்புரிமையில் இருந்து விலகி வரல்வேண்டும். என ஏனைய கட்சிகள் ஜ.தே.கட்சிகளிடம் சொல்லியிருக்கின்றன. 

இதில் ரணிலா, கருஜயசூரிய, அல்லது சஜித்தா அர்ஜூனவா , சரத் என் சில்வா 
அல்லது சந்திரிக்கா பண்டாரநாயக்கவா யார். பொதுவேற்பாளர் எதிர்கட்சிகள் ஒரு நோக்கில் இருந்துகொண்டு இன்னும் முடிவு எடுக்காமல் திண்டாடுகின்றனர். இதுவரையும் மஹிந்தவுடன் எதிராக நிற்கக் கூடிய ஒருவர் இந்த எதிர்கட்சிக்குள் ஒரு பொதுவேற்பாளர் இல்லை என்றே நான் திட்டவட்டடமாகச் சொல்கின்றேன்.

இந்த நாட்டினை கட்டி எழுப்புகின்ற சேனாதிராஜா மஹிந்த ராஜபக்சையும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாயவையும் அவர்களது அதிகாரக் கதிரையில் இருந்து அகற்ற வேண்டுமென்று சில வெளிநாட்டு தூதரகங்களுக்கும், வெளிநாடுகளில் இயங்குகின்ற தமிழ் டயஸ்போரா, மற்றும் ரீ.என்.ஏ தலைவர் சம்பந்தனின் வேண்டுகோளை ஏற்றே ரணில் விக்கிரமசிங்க இந்த பொதுவேற்பாளருக்கு இசைந்து போயுள்ளார். 

அத்துடன் என்.ஜி.ஓ கரர்களான ஜயந்த விக்கிரம, ரட்ண நிர்மலா சந்திரண போன்றவர்கள் நிதியைத் திரட்டி இந்த ஆட்சியை மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு சிறுபாண்மை வாக்குகள் இருக்கின்றன. முற்று முழுதாக ஜனாதிபதி மஹிந்தவுக்கு இருக்கின்ற பொளத்த வாக்குகளை திசை திருப்புவதற்கே ஜனாதிபதி முறைமை என்ற தலைப்பின் கீழ் ஒரு அணியின் கிழ் திரண்டுள்ளனர்.

ஜ.தே.கட்சி கடந்த 20 வருட காலமாக தோல்வியுற்றதால் அவர்களுக்கு அதிகாரத்தை பிடிக்க வேண்டும். அதற்காக எதையும் அவர்கள் செய்யத் தயாராக உள்ளனர் பௌhத்த மக்களது வாக்குகளை சிதரடிக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர். அத்துடன் பௌத்த வாக்குகளை பெற்றுக் கொள்ள பௌத்த கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டுள்ளனர். 

ரீ.என்.ஏ தலைவர் இரா சம்பந்தன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் மட்டுமல்ல முஸ்லீம் மக்;களின் ஆதரவைப் பெற்றுத் தருவதாக ரணிலிடம் பேசியுள்ளார். அவர் 6க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்துள்ளார். அவரது கோரிக்கை இன்றைய திவயின சிங்களப் பத்திரிகையில் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள,

வடகிழக்கில் உள்ள 15ஆயிரம் இரானுவப் படைகளை அகற்ற வேண்டும். வடகிழக்கில் சுயநிர்ணய சபை வழங்கப்படல் வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இந்தியாவில் இருந்து கொண்டு முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனும் இதே போன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கமும் தாண் ஆயுதகுழுக்களில் இருக்கும்போது யாழ் தேவி புகையிரதத்திற்கு முதலில் குண்டு வீசியவன் நானே. என அவரே சொல்லியிருக்கின்றார். அரசாங்கம் சிவாஜிலிங்கத்தைப் பிடித்து சிரையில் அடைக்கவேண்டும். அவர் மேலும் வடக்கில் உள்ள சகல புத்தர் சிலைகளையும் அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் முஸ்லீம் வாக்குகள் சம்பந்தமாக சம்பந்தன் அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவோடு ஏற்கனவே பேசியுள்ளார். அவரது கோரிக்கைகளுக்கு ரணில் ஒத்துக் கொண்டுள்ளார். பொது எதிர்கட்சிகளுக்கு பௌத்த மக்களது வாக்குகளுக்கே ஜனாதிபதி முறைமை ஒழித்துக் காட்டுவது என்ற தீர்மாணத்தில் இறங்கியுள்ள்ளார். 

ஜனாதிபதி முறைமைமைய நீக்கி இந்த அரசியல் அமைப்பை திருத்த வேண்டிய அவசியம் எங்களது கட்சிக்கு இல்லை. தற்போது அமுலில் உள்ள அரசியல் அமைப்பை முறையை 18 முறைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களது நிலைப்பாடு முழு அரசியல் அமைப்பையும் மாற்றியமைப்பதே எமது நிலைப்பாடாகும். 

எமது கட்சியின் கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்று 300 உள்ளூர் கைத்தொழில் சபைகளை ஏற்படுத்துவதற்கு இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளார்.

தினேஸ் குணவர்த்தன கொண்டு வந்த தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கு கொண்ட திருத்தத்தை எதிர்த்தவர்கள் இந்த ஜ.தே.கட்சியம் ஜே.வி.பி கட்சியுமே. ஆனால் இப்பொழுது கூறுகின்றனர் இவற்றையும் மாற்றியமைக்க வேண்டும். எனச் சொல்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :