கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை




அஷ்ரப் ஏ சமத்-

ல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை கல்லூரியின் கட்டார் வாழ் பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு தலைமை தாங்குவதற்கு பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் செயலாளர் தௌபீக் எம். கான் இலங்கையிலிருந்து விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

மேற்படி நிகழ்வு BCAS கெம்பசின் கட்டார் கிளையில் கடந்த 31.10.2014 ஆம் திகதி இரவு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதில் சுமார் 40 பழைய மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது அங்கத்துவத்தினை பெற்றுக் கொண்டனர். பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் கல்லூரி அபிவிருத்தி சம்பந்தமாகவும் பல விதமான கருத்துகள் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளையின் செயலாளர் தௌபீக் எம். கான் கல்லூரியின் நிலைமை, பழைய மாணவர் சங்கம் மற்றும் அதன் கொழும்பு கிளையின் செயற்பாடுகள் பற்றியும் ஒரு நீண்ட விளக்கவுரையின்றினை மேற்கொண்டிருந்தார். அத்துடன் கட்டார் கிளையின் முகாமைத்துவக் சட்டக் கோவையினையும் சமர்ப்பித்தார். மேலும் இலங்கயில் இருந்து கொண்டு ஸ்கைப் ஊடாக பழைய மாணவர் சங்க பொது செயலாளர் பொறியியலாளர் அஸ்லம் சஜா அவர்களும் ஒரு உரை ஒன்றினை நிகழ்த்தினார்.

இதன்போது கட்டார் கிளையின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு மூன்று இணைப்பாளர்களும் மூன்று துணை இணைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர். A.M. Fahim (Branch Coordinator), A.M.M. Sifak(Asst. Branch Coordinator), M.S.M. Siraj (Coordinator for Finanace), M.T.M. Hassan (Asst. Coordinator for Finance), M.Muzathik (Coodinator for Membership), I.L.M. Sarjoon (Asst. Coordinator for Membership).

தெரிவு செய்யப்பட்ட இணைப்பாளர்கள் கட்டார் கிளையின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதுடன் மேலும் ஆர்வமுள்ள பழைய மாணவர்களையும் ஒன்றிணைத்து பாடசாலைக்கும் மற்றும் பழைய மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப் படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :